கம்பராமாயணம் 4137 · கிட்கிந்தா 7.115
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் - என்னை வெற்றி கொண்டதோர் ஒப்பற்ற வெற்றியை உடையவனே! பெற்றி இது - (எங்கள்) பிறப்பிற்குரிய தன்மை இது; பெற்றது ஒர் பெற்றியின் - நான் அடைந்துள்ள பிறவியின் தன்மைப்படி; குற்றம் உற்றிலென் - யாதொரு குற்றமும் செய்திலேன்; அது நீ கோடி - அதனை நீ மனத்தில் கொள்வாய்; என - என்று; சொற்ற சொல் துறைக்கு - வாலி சொன்ன சொற்களின் போக்கிற்கு; உற்றது சொல்லுவான் - பொருத்தமான மறுமொழியை (இராமன்) சொல்லத் தொடங்கினான்.
வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய் - வெற்றிகளுள்ளும் மேம்பட்ட வெற்றியை உடையவனே என்றும் பொருள் கொள்வர். எவராலும் வெல்ல முடியாத் தன்னை இராமன் வென்றதால் அவ் வெற்றியைப் பெரு வெற்றியாகக் குறித்தான் என்க. 'கொள்தி' என்பது கோடி என நின்றது. கோடி - கொள் + தி. தி - முன்னிலை ஏவல் விகுதி. மற்று, ஆல் என்பன அசைகள். தன் பிறப்பின் இயல்பு காட்டி வாலி, தான் குற்றமற்றவன் என உரைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "This is our nature; by the nature of the birth I was given
- I have done no wrong; take that to heart,
- you who have won a victory above all victories!" To what he said
- Irāmaṉ began to give a fitting answer:
What the poem says
Vālī ends his defence: by the nature of his monkey birth he has committed no crime, and Irāmaṉ should recognise that. He calls Irāmaṉ the winner of a victory beyond all others, since no one had ever beaten Vālī before. Irāmaṉ begins his answer.