கம்பராமாயணம் 4138 · கிட்கிந்தா 7.116

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நலம் கொள் தேவரின் தோன்றி , நவை அற ,
கலங்கலாது , அற நல் நெறி காண்டலின் ,
விலங்கு அலாமை விளங்கியது ; ஆதலான்
அலங்கலார்க்கு இது அடுப்பது அன்று ஆம் அரோ .

பொருள் · Meaning in Tamil

நலங்கொள் தேவரின் தோன்றி - நன்மையை மேற்கொள்ளும் தேவர்கள் போலப் பிறந்து; நவை அற - குற்றங்கள் இல்லாதபடி; கலங்கலா - நிலை கலங்காமல்; அற நல் நெறி - அறத்தின் நல்ல வழியை; காண்டலின் - நீ அறிந்துள்ளமையால்; விலங்கு அலாமை - (நீங்கள்) சாதாரண விலங்கினத்தைச் சார்ந்தவர் அல்லீர்; விளங்கியது - (என்பது) தெளிவாகத் தெரிகின்றது; ஆதலால் - ஆகையால்; அலங்கலார்க்கு - வெற்றி மாலை அணிந்த வீரர்களாகிய உங்களுக்கு; ஈது அடுப்பது அன்று ஆம் - இவ்வாறு விலங்கு என்று (சமாதானம்) கூறுவது பொருந்துவது அன்று ஆம்.

தேவரின் தோன்றி - தேவர் குலத்தில் தோன்றி என்றும் பொருள் கொள்வர். இது வாலி இந்திரன் அம்சமாகப் பிறந்தவன் என்பதை உட்கொண்டு கூறியதாகவும் கொள்ளலாம். 'தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறுமருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன (205) என்றமை காண்க. வாலி, உடம்பை விட்டு உயிர் பிரியும் நிலையிலும் நல்லற நெறியின் இயல்பு இதுவெனக் குற்றமற உணர்ந்து பேசும் திறம்பெற்றிருத்தலால் 'நவை அறக் கலங்கா அறநல்நெறி காண்டலின்' என்றான். தேவரின் தோன்றலாலும், அறநெறி தெரிந்திருத்தலாலும் வாலி விலங்கு என்ற பெயரில் அறம் மாறிய செயல்களைச் செய்தல் கூடாது என இராமன் விளக்கினான். அதனால் வடிவத்தால் மட்டும் ஒருவர் தாழ்நிலையான விலங்கு நிலை அடைவதில்லை என்பது புலனாகிறது. அவரவர் பண்புகளால் உயர்வு தாழ்வு குறிக்கப்படுகிறதேயன்றி, பிறப்பினால் அல்ல என்பதை இராமன் வற்புறுத்தினான் என்க. அதனால் எம்பால் குற்றம் காண்பது பொருந்தாது எனக்கூறிய வாலிக்கு 'இது அடுப்பது அன்று' என்றான். அலங்கலார்க்கு - படர்க்கைப் பெயர் முன்னிலைக்கண் வந்தது; அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Born like the gods who hold to the good, and since, without fault
  2. and without wavering, you can see the good path of dharma,
  3. it is clear you are not mere beasts; and so
  4. this plea does not befit you who wear the garland of victory."

What the poem says

Irāmaṉ rejects Vālī's plea. Vālī was born of a god, as son of Intiraṉ, and even now, dying, he reasons clearly about dharma. A being who understands right and wrong cannot claim to be a mere animal.

The underlying principle is that what makes someone high or low is conduct, not the body one is born in. So the excuse "we are only beasts" is not open to a garlanded hero like Vālī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nalam koḷ tēvariṉ tōṉṟi, navai aṟa,
kalaṅkalā, aṟa nal neṟi kāṇṭaliṉ,
vilaṅku alāmai viḷaṅkiyatu; ātalāl
alaṅkalārkku ītu aṭuppatu aṉṟu āmarō.