கம்பராமாயணம் 4139 · கிட்கிந்தா 7.117

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பொறியின் யாக்கையதோ ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ , அறம் அத்து ஆறு தான் ?
நெறியின் நோன்மையை நேர் நின்று உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்று உறு பெற்றிதான் ?

பொருள் · Meaning in Tamil

அறத்து ஆறுதான் - அறநெறி என்பது; பொறியின் யாக்கையதோ - ஐம்பொறிகளோடு பொருந்திய உடம்பைப் பற்றியதோ? புலன் நோக்கிய - ஐம்புலன்களால் நன்றும் தீதும் ஆராய்ந்து உணர்கின்ற; அறிவின் மேலது அன்றோ - அறிவைப் பற்றியது அல்லவா? நெறியும் நீர்மையும் - அறநெறியினையும் அதன் இயல்பினையும்; நேரிது உணர்ந்த நீ- செம்மையாக அறிந்து உணர்ந்த நீ; பிழை உற்று - தவறுகளைச் செய்து விட்டு; உறு பெற்றிதான் பெறுதியோ - (பிழையன்று, என் செயல் சரியானதென்று) சாதிக்கின்ற தன்மையைப் பெறக்கடவையோ?

பொறி- மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. இப்பொறிகளை வாயிலாகக் கொண்டு நிகழும் புலன்களாவன ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பன. நோக்குதல் - நன்றும் தீதும் கண்டறிதல், பொறிகள் எல்லா உயிர்களுக்கும் உண்டு. புலனறிவோ உயிர்களின் சிறப்பிற்கேற்றவாறு உயர்வு பெறும். வாலி அறிவு மிக்கவனாதலின் பொறிகளை மட்டும் கொண்டு தன்னை விலங்கினம் எனக் கூறிக் கொள்வதும் தவறுகள் செய்வதும் தகுதியுடையன அல்ல என்பதாம். தொல்காப்பிய மரபியலில் 'மக்கள் தாமே ஆறறிவுயிரே, பிறவுமுளவே அக் கிளைப் பிறப்பே' (தொல். மர- 33) என்ற நூற்பாவும் 'பிறப்பென்றதனால், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவு உயிராய் அடங்கும் என்பது' என்ற உரையும் இங்குக் காணத்தக்கன. பிழை உற்றுறு பெற்றிதான் பெறுதியோ என்பதற்குத் தவறுகளை மிகுதியாகச் செய்கின்ற தன்மையைப் பெறக்கடவையோ என்றும் பொருள்கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is the way of dharma a matter of the body with its senses?
  2. Does it not rest on the mind that weighs what the senses perceive?
  3. You, who have rightly understood the path and its nature,
  4. will you, having done wrong, still claim the right to call it right?

What the poem says

Irāmaṉ is answering Vāli, who lies wounded and has argued that as a monkey he cannot be judged by human law. Irāmaṉ replies that righteousness belongs not to the body and its five senses, which all creatures share, but to the understanding that judges good and evil through them.

Vāli has just shown in his own speech that he knows dharma well, so he cannot shelter behind his animal birth. The commentary recalls the old grammatical tradition that animals such as monkeys, if they have discerning minds, are counted among the six-sensed beings like humans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poṟiyiṉ yākkaiyatō? pulaṉ nōkkiya
aṟiviṉ mēlatu aṉṟō, aṟattāṟutāṉ?
neṟiyum nīrmaiyum nēritu uṇarnta nī
peṟutiyō piḻai uṟṟuṟu peṟṟitāṉ?