கம்பராமாயணம் 4146 · கிட்கிந்தா 7.124

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

இனையது ஆதலின் - உண்மை இத்தன்மையது ஆதலால்; எக் குலத்து யாவர்க்கும் - எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் எல்லோர்க்கும்; மேன்மையும் கீழ்மையும் - உயர்வும், இழிவும்; வினையினால் வரும் - அவரவர் செய்யும் செயல்களால் வரும். அனைய தன்மை அறிந்தும் - அத்தன்மையை நீ உணர்ந்திருந்தும்; மனையின் மாட்சி - பிறன் மனையாளின் கற்பு மாண்பினை; அழித்தனை - அழித்தாய்; என்றான் - என்று உரைத்தான்; மனு நீதியான் - மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

நற்செயலால் மேன்மையும் தீச்செயலால் கீழ்மையும் வரும் என்க. மேன்மையும் கீழ்மையும் வினையினால் வரும் என்பது 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்' (குறள் - 505) என்னும் குறள்வழி இருத்தல் காண்க. மாட்சி - பெருமை இங்கே சிறப்பினால் கற்பை உணர்த்திற்று. பாவங்கள் பலவற்றுள் பிறன்மனை நயத்தல் என்பது கொடிய பாவமாகும். அத்தகைய கொடிய பாவத்தை வாலி புரிந்ததால், தண்டிக்கத் தான் அம்பு தொடுத்தது குற்றமன்று என இராமன் உணர்த்தினான். அறத்தைக் காத்தலாகிய தொழிலில் மனு விதித்த நெறியிலிருந்து இராமன் தவறுபவன் அல்லன் என்பதை அறிவிக்கவே 'மனுநீதியான்' என உரைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "This being so, for anyone of any clan,
  2. it is by deeds that greatness and baseness come.
  3. Knowing that truth, you destroyed
  4. the honour of a household," said the one true to Maṉu's law.

What the poem says

Irāmaṉ draws his conclusion: high and low come from one's own deeds, whatever one's clan. Vāli knew this, yet he took his brother's wife and destroyed her chastity and the honour of the home. Desiring another man's wife is among the gravest sins, so Irāmaṉ's arrow was just punishment.

The poet calls Irāmaṉ "the one of Maṉu's justice" to stress that, in protecting dharma, he never strays from the law. The commentary cites the Tirukkuṟaḷ (505): one's own deeds are the touchstone of greatness and littleness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉaiyatu ātaliṉ, ek kulattu yāvarkkum,
viṉaiyiṉāl varum, mēṉmaiyum kīḻmaiyum;
aṉaiya taṉmai aṟintum, aḻittaṉai,
maṉaiyiṉ māṭci ' eṉṟāṉ maṉu nītiyāṉ.