கம்பராமாயணம் 415 · பால 8.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவர்களின் குசநாபற்கே - அந்த நால்வருள் ஒருவனான குசநாபன் என்பவனுக்கு, ஐ இரு பதின்மர் அம்சொல் துவர் இதழ் தெரிவை நல்லார் தோன்றினர் - அழகிய சொற்களும், பவளம் போன்ற உதடும் கொண்ட பெண்கள் நூறு பேர் பிறந்தனராகி, வளரும் நாளில் இவர் பொழில் தலைக்கண் ஆயத்து எய்துழி - வளர்ந்து வரும் காலத்திலே இப்பெண்கள் சோலையிலே தோழியர் கூட்டத்துடன் சென்றபோது; வாயு எய்தி - காற்றுக் கடவுளான வாயு தேவன் அங்கே வந்து; கவர்மனத்தினனாய் அந்தக் கன்னியர்தம்மை நோக்கி - கவரப் பெற்ற மனத்தை உடையவனாகி அந்தப் பெண்களைப் பார்த்து.
நல்லார்: பெண்கள். ஆயம்: தோழியர் கூட்டம். 'தலைக்கண்' உருபின் மேல் உருபு புணர்ந்து. கவர்மனம்: வினைத் தொகை. கன்னியர்: கன்னித்தன்மை நீங்காத பருவத்தினர். 'அம்சொல்' நாணம் தோன்றாமையும், “துவர் இதழ்” செம்மை குறையாமையும் கன்னியர் என்பதை உணர்த்தும். குசன் மக்கள் நால்வரில் ஒருவனான குசநாபன் என்பவனுக்கு நூறு பெண்கள்; ஒரு நாள் தோழிகளுடன் சோலைக்கு அவர்கள் செல்ல வாயுதேவன் அவர்களை நோக்கி என்பது பொருள் இது குளகப்பாட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of them, to Kucanāpaṉ alone a hundred fair maidens
- with lovely speech and coral-red lips were born; as they were growing up,
- when they went with their companions into a grove, Vāyu came there,
- his heart captivated, and looking at those maidens,
What the poem says
Kucanāpaṉ, one of the four sons, had a hundred daughters, sweet-voiced and red-lipped. One day, while they were still young girls, they went into a garden with their companions. Vāyu, the wind-god, came there, was smitten, and turned to them.
The sentence is completed in the next verse; the commentary calls such a verse a kuḷakam, one that cannot stand alone.