கம்பராமாயணம் 416 · பால 8.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தனிமகரம் கொடிகொண்டோன் - ஒப்பற்ற மகரமீனைக் கொடியாகக் கொண்டவனான மன்மதனுடைய; குனிசிலைச் சரத்தால் நொந்தேன் - வளைந்த வில்லம்புகளால் நான் மிகவும் வருந்தினேன்; வடித்தடம் கண்ணீர் - (ஆகையால்) மாம்பிஞ்சின் பிளவு போன்ற அகன்ற கண்களை உடைய பெண்களே; என்னை மணத்திர் என்று உரைப்ப - என்னை மணம் செய்து கொள்வீராக என்று வாயுதேவன் கூற; எந்தை அடித்தலத்து உரைப்ப - (நீ சென்று) எங்களது தந்தையை வணங்கி அவரிடம் கேட்க; நீரோடு அளித்திடின் அணைதும் என்ன - (அவர்) எம்மை நீருடன் தாரை வார்த்துக் கொடுத்தால் நாங்கள் உன்னை (மணந்து) அணைவோம் என்று கூற; வெரிநை ஒடித்தனன் - வாயு கோபம் கொண்டு (அவர்களது) முதுகை ஒடித்துவிட்டான்; ஒளிவளை மகளிர் எல்லாம் வீழ்ந்தனர் - ஒளிபொருந்திய வளைகளை அணிந்த அப்பெண்களெல்லாம்
மன்மதன் மீனைக் கொடியாக உடையவன் என்பதால் “கொடித்தனி மகரம் கொண்டோன்” என்று சிறப்பிக்கப்பட்டான். குனிசிலை: வளைந்த வில் (வினைத் தொகை. சரம்: அம்பு. வடி: மாம்பிஞ்சின் பிளவு. வடிக்கண்: உவமைத் தொகை. “எந்தை அடித்தலத்து (நீர்) உரைப்ப, (அவர்) நீரோடும் அளித்திடின்” என்று கூட்டிப் பொருள் கொள்க. வெரிநை: முதுகு. வளை: வளையல். வளை மகளிர்: இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை. மன்மத பாணத்தால் நொந்தேன் - என்னை மணந்து கொள்ளுங்கள் என, வாயு கேட்க, அப்பெண்கள் - எங்கள் தந்தையிடம் நீ கேட்டு, அவர் தாரைவார்த்து மணம் செய்து வைத்தால் நாங்கள் உன்னைச் சேர்ந்து அணைவோம் என்றனர் சினம் கொண்ட வாயுதேவன் அவர்களது முதுகை ஒடித்தான். அம்மகளிர் நிற்க இயலாது கீழே வீழ்ந்தனர் என்பது பொருளாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I am wounded by the arrows from the bent bow of him who holds the matchless makara banner;
- you with eyes wide as split mango, marry me, he said. If you speak
- at our father's feet and he gives us away with the pouring of water, we will be yours, they said;
- he broke their backs, and all the women with bright bangles fell.
What the poem says
Vāyu tells the girls he has been struck by the arrows of Kāmaṉ, the love-god whose banner bears the makara fish, and asks them to marry him.
They answer properly: he should ask their father, and if their father gives them in marriage with the ritual pouring of water, they will be his. Enraged at being refused, the wind-god breaks their backs, and all hundred collapse to the ground.