கம்பராமாயணம் 4159 · கிட்கிந்தா 7.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொற்றவ - வெற்றியை உடையவனே! மற்று இலேன் எனினும் - உனக்கு வேறொரு பேருதவியைச் செய்யும் பேறு பெற்றிலேன் ஆயினும், மாய அரக்கனை - வஞ்சனையில் வல்ல அரக்கனான இராவணனை; வாலின் பற்றி- என் வாலினால் சுற்றிப் பிடித்து; நின்கண் தந்து - உன்னிடம் கொணர்ந்து ஒப்புவித்து; குரக்கு இயல் தொழிலும் - ஒரு குரங்காகிய எனக்கு இயன்ற தொழிலையாவது; காட்டப் பெற்றிலேன் - செய்து காட்டும் பேறுபெறவில்லை; கடந்த சொல்லின் - நிகழ்ந்தது போனவற்றைச் சொல்வதால், பயன் இலை - ஒரு பயனும் இல்லை; உற்றது செய்க என்றாலும் - நிகழும் இச்செயலைச் செய்வாயாக என்றாலும்; பிறிது ஒன்றேனும் - அன்றி வேறொரு செயலைச் செய்க என்றாலும், இவ் அனுமன் உரியன் - (அதனைச் செய்து முடித்தற்கு) இந்த அனுமன் உரிய தகுதி உடையவன் ஆவான்; என்றான் - என்று வாலி இராமனுக்கு உறுதி கூறினான்.
இராவணனை வென்று அவனை வாலில் சுற்றி இராமனிடம் ஒப்படைக்க முடியாமைக்கு வாலி வருந்தினான். கழிந்த செயல்களுக்காக இரங்குதல் பயனற்றுப் போவதால் 'கடந்த சொல்லின் பயனில்லை' என்றான். குரக்கு இயல் தொழில் - விரைந்து தாவிச் சென்று பற்றி விடாப்பிடியாகக் கொணர்தல் - 'குரங்குப்பிடி' என்பது உலக வழக்கு. சுக்கிரீவன் மாட்டுப் பகைமை நீங்கி வாலி இரக்கம் கொண்டது போல, அனுமனின் திறமையை வெளிப்படுத்திப் பேசியதும் அவனது நல்ல பண்பைக் காட்டுகிறது. அனுமன் ஆற்றலை அவன் நன்கு அறிந்திருந்தனன் என்பதும் புலனாகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Though I have nothing more to give, seizing that deceitful demon in my tail,
- victor, and bringing him before you, showing even what a monkey can do,
- that I was not granted. There is no use in speaking of what is past. If you say
- 'Do what must be done,' or anything else, this Aṉumaṉ is fit for it," he said.
What the poem says
Vāli regrets that he will not be able to do Irāmaṉ the service he could have done: to catch Irāvaṇaṉ, wrap him in his tail and hand him over. Once a monkey seizes something, it does not let go. But there is no point in grieving over what is past.
Instead he commends Aṉumaṉ: whatever task Irāmaṉ gives, the search for Cītai or anything else, Aṉumaṉ is equal to it. This generous praise is another sign of Vāli's change of heart.