கம்பராமாயணம் 4160 · கிட்கிந்தா 7.138

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 - -
–

பொருள் · Meaning in Tamil

ஆழி ஐய - சக்கராயுதத்தை உடைய தலைவனே! வானினும் உயர்ந்த தோளாய் - வானத்தை விட உயர்ந்த தோள்களை உடையவனே! அனுமன் என்பவனை - அனுமனை; நின் செய்ய செங்கை - உனது அழகிய சிவந்த கையில் ஏந்தியுள்ள; தனு என நினைதி- வில்லாகிய கோதண்டமே என நினைப்பாயாக. மற்று - மேலும்; என் தம்பி நின் தம்பி ஆக நினைதி - என் தம்பி சுக்கிரீவனை உன் தம்பியருள் ஒருவனாக நினைப்பாயாக; இன்னோர் அனையவர் ஓர் துணைவர் இலை - இவர்களைப் போன்றவர்களாய் ஒப்பற்ற துணைவர்கள் வேறு பிறர் இலர்; நீ - ; ஈண்டு - இவர்களைத் துணையாகக் கொண்டு; அவ்வனிதையை நாடிக் கோடி - அந்தச் சீதாபிராட்டியைத் தேடிக் கொள்வாயாக.

ஆழி ஐய - ஆணைச் சக்கரத்தை உடைய தலைவனே எனப் பொருள் கொளலும் பொருந்தும். வானினும் உயர்ந்த தோளாய் என்ற தொடர்க்கு 'வானினும் உயர்ந்த மானக் கொற்றவ' (4067) என்ற இடத்துத் தந்த விளக்கத்தை நோக்குக. நின் தம்பியாக - என்றும் பிரியாத இலக்குவனாக எனவும் கொள்ளலாம். கையினின்று வில் நீங்காது நல்லோரைக் காத்து அல்லாரை அழித்துத் துணையாவது போல் அனுமன் துணையாவன் என்பதால் 'அனுமன் என்பவனை நின் செய்ய செங்கைத் தனு என நினைதி' என்றான். தமையனைப் பிரிந்து சுக்கிரீவன் வருந்துவானாதலின் அத்துன்பம் போக்க அவனையும் தம்பியாக ஏற்குமாறு வேண்டினான். அவர்கள் ஆற்றலையும் உணர்த்துவானாய் "ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை" என்றான். இங்கு அனுமனை இராமன் கைத்தனு எனக் கூறிய சிறப்பைக் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Think of the one called Aṉumaṉ, lord with the discus, as the bow
  2. in your fair red hand; and think of my brother as your brother;
  3. there are no other companions like these. With them here,
  4. seek out that lady and win her back, you whose shoulders are higher than the sky!"

What the poem says

Vāli advises Irāmaṉ, addressing him as the bearer of the discus, a sign that he is Viṣṇu. Aṉumaṉ should be to him as his own bow, always in his hand, protecting the good and destroying the wicked. Cukkirīvaṉ should be treated as a brother, like Ilakkuvaṉ, to ease the pain of losing his elder brother.

With such allies there are none to match, Irāmaṉ can search for Cītai and recover her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉumaṉ eṉpavaṉai - āḻi aiya! - niṉ ceyya ceṅ kait
taṉu eṉa niṉaiti; maṟṟu, eṉ tampi niṉ tampi āka
niṉaiti; ōr tuṇaivar iṉṉōr aṉaiyavar ilai; nī, īṇṭu, av
vaṉitaiyai nāṭik kōṭi – vāṉiṉum uyarnta tōḷāy!