கம்பராமாயணம் 4165 · கிட்கிந்தா 7.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விதியினாரே - ஊழ்வினையே, உதவுவான் அமைந்த காலை - துணையாவதற்குப் பொருந்தும் பொழுது; அருமை என் - அடைதற்கு அருமையானது யாது உளது? (எதுவுமில்லை); இருமையும் எய்தினாய் - இம்மை, மறுமை இன்பங்களை எல்லாம் நீ அடைந்தாய். இனிச் செயற்பாலது எண்ணின் - இனி நீ செய்யத்தக்கது யாதெனக் கருதுமிடத்து; திருமறு மார்பன் - திருமகளையும் ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவினையும் மார்பில் கொண்ட திருமாலாகிய இராமனின்; ஏவல் சென்னியில் சேர்த்தி - கட்டளையைத் தலை மேற்கொண்டு, சிந்தை ஒருமையின் நிறுவி - மனத்தை (அவனுக்குக் குற்றவேல் புரிவதாகிய) ஒருமை நிலையில் நிறுத்தி; மும்மை உலகினும் உயர்தி - மூன்று உலகங்களிலும் சிறப்புற்று உயர்வாயாக.
விதியே வந்து உதவுகையில் கிடைத்தற்கரியது ஒன்றுமில்லை என்பது உலகறிந்த உண்மை. 'விதியே நல்கின் மேவல் ஆகாது ஏன்?' (3808) எனச் சுக்கிரீவன் உரைத்தது காண்க. விதியினார் - உயர்வு கருதி உயர்திணைச்சொல்லால் கூறினான். திணை வழுவமைதி. விதியினாரே - ஏகாரம் தேற்றுப்பொருள். ஏவல் சென்னியில் சேர்த்தல் - கட்டளையைத் தலைமேற்கொண்டு பணிவுடன் செய்து முடித்தலைக் குறிக்கும். மற்று - வினைமாற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "What is hard to get when fate itself stands ready to help?
- You have gained both worlds. And if you think what you must do now,
- set on your head the command of him whose chest bears Tiru and the mark,
- fix your mind on that one thing, and you will rise above all three worlds."
What the poem says
Vāli tells Cukkirīvaṉ that destiny has favoured him: he has won joy in this life and the next. What remains is to place Irāmaṉ's commands on his head, that is, to obey them humbly, and to keep his mind fixed on serving him.
Irāmaṉ is described as Viṣṇu, who carries the goddess Lakṣmī and the Śrīvatsa mark on his chest. The commentary recalls Cukkirīvaṉ's own earlier words: if fate grants it, what cannot be reached?