கம்பராமாயணம் 4166 · கிட்கிந்தா 7.144

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மத இயல் குரக்குச் செய்கை - அறியாமையால் செருக்குறும் இயல்பாகிய குரங்கின் செயலையும்; மயர்வொடு - மயக்கத்தையும்; மாற்றி- அறவே போக்கி; வள்ளல் உதவியை உன்னி - வள்ளலாகிய இராமன் உனக்குச் செய்த உதவியை மறவாமல் உள்ளத்தில் கொண்டு, உற்றிடத்து - அவனுக்கு ஓர் இடையூறு ஏற்பட்ட காலத்தில்; ஆவி உதவுகிற்றி - உனது உயிரையும் கொடுத்து உதவிபுரிவாயாக. பதவியை எவர்க்கும் நல்கும்- உயர்பதவியாகிய வீடுபேற்றை எல்லோர்க்கும் வழங்கும், பண்ணவன் - கடவுளாகிய இராமன்; பணித்த யாவும் - கட்டளையிட்ட செயல்களையெல்லாம்; சிதைவு இல செய்து - குறையில்லாதவனாய்ச் செய்து; தீர்வு அரும் பிறவி - எளிதில் நீக்குதற்கரிய பிறவியை; நொய்தில் தீர்தி - எளிதில் நீங்கப் பெறுவாய்.

'மத' என்பது மடமையினை உணர்த்தும் உரிச்சொல். அதன் காரியமாகிய 'செருக்கு' என்னும் பொருளில் இங்கு வந்தது. குரக்குச் செய்கை - அறிவுக்குறைவாலும், சபல புத்தியாலும், திரிபுணர்ச்சியாலும் செய்யும் குரங்கின் செயல்கள். மயர்பு- இயற்கைப் பேதைமையாலும் மதுபானத்தாலும் மனம் மயங்குதல். வள்ளல் உதவி - பகைவனைக் கொன்று, மனைவியை மீட்டு, நாட்டாட்சியினையும் கொடுத்தமை. உற்றிடத்து - உற்று இடத்து தொகுத்தல் விகாரம். உதவுகிற்றி - ஏவல் ஒருமை வினைமுற்று. கில் என்பது ஆற்றலுணர்த்தும் இடைநிலை. செய்ந்நன்றி மறவாமை பற்றி வாலி கூறுதல் நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Putting away the proud monkey ways and their confusion, remember
  2. the help of this generous lord, and when need comes, give even your life to help him;
  3. doing without flaw all that is commanded by the God who grants the highest state to all,
  4. you will easily end the cycle of birth that is so hard to end."

What the poem says

Vāli warns his brother against the faults of their kind: vanity, a fickle and muddled mind, and the confusion of drink. He must never forget what Irāmaṉ has done for him, killing his enemy, restoring his wife and giving him the kingdom, and must be ready to lay down his life for him.

Faithful service to the god who grants liberation to everyone will free Cukkirīvaṉ from rebirth. The commentary highlights the theme of never forgetting a kindness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mata iyal kurakkuc ceykai mayarvoṭu māṟṟi, vaḷḷal
utaviyai uṉṉi, āvi uṟṟiṭattu utavukiṟṟi;
pataviyai evarkkum nalkum paṇṇavaṉ paṇitta yāvum
citaivu ila ceytu, noytiṉ, tīrvu arum piṟavi tīrti. '