கம்பராமாயணம் 4180 · கிட்கிந்தா 7.158

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி ,
தன் துணைத் தடக்கை ஆரத் தனயனைத் தழுவி , சாலக்
குன்றினும் உயர்ந்த திண்தோள் குரக்கு இனத்து அரசன் , கொற்றப்
பொன் திணி வயிரப் பசுமை பூண் புரவலன் தன்னை நோக்கி .

பொருள் · Meaning in Tamil

என்றனன் - என்று; இனைய ஆய உறுதிகள் - இத்தன்மையனவான நன்மை பயக்கும் செய்திகள்; யாவும் சொல்லி - எல்லாம் (அங்கதனுக்குச்) சொல்லி; குன்றினும் சால உயர்ந்த - மலைகளைவிட மிக உயர்ந்ததான; திண்தோள் - வலிய தோள்களை உடைய; குரக்கு இனத்து அரசன் - வானரக் கூட்டத்திற்கு அரசனாகிய வாலி; தன் துணைத் தடக்கை - தன்னுடைய இருபெரும் கரங்களால், தனயனை ஆரத்தழுவி - தன் மைந்தனான அங்கதனை இறுக அணைத்துக் கொண்டு; கொற்றம் - வெற்றியை உடைய; பொன்திணி வயிர பைம் பூண் - பொன்னால் செய்யப்பட்டு வயிரம் முதலிய மணிகள் பதிக்கப் பெற்ற பசும்(பொன்) அணிகலன்களை அணிந்த; புரவலன் தன்னை நோக்கி - அரசனான இராமனைப் பார்த்து...

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having spoken such words of counsel, every one,
  2. he embraced his son fully with his two great arms;
  3. then the king of the monkey race, with mighty shoulders higher than mountains,
  4. looked toward the protector adorned with victorious jewels of gold set thick with diamonds,

What the poem says

This verse begins a two-verse sentence that ends in the next verse. Having finished his advice, Vāli clasps Aṅkataṉ tightly in both arms, then turns his gaze to Irāmaṉ, described as a king in gem-studded golden ornaments.

The verse has no main verb of its own; what Vāli says to Irāmaṉ follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟaṉaṉ iṉaiya āya uṟutikaḷ yāvum colli,
taṉtuṇait taṭak kai ārat taṉayaṉait taḻuvi, cālak
kuṉṟiṉum uyarnta tiṇ tōḷ kurakkuiṉattu aracaṉ, koṟṟap
poṉ tiṇi vayirap paim pūṇ puravalaṉtaṉṉai nōkki.