கம்பராமாயணம் 4196 · கிட்கிந்தா 7.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முந்துறச் சொற்றேன் - (சுக்கிரீவனுடன் போர் செய்ய வருவதற்கு) முன்னதாகவே (இராமன் சுக்கிரிவனுக்குத் துணையாகப் போரிட வந்துள்ளான் என்ற செய்தியை) நான் சொன்னேன். அன்ன சொல் கேளாய் - அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல்; அற்றான் - விருப்பு வெறுப்பற்ற இராமன்; அன்னது செய்கலான் - அவ்வாறு முறையற்ற செயலைச் செய்யமாட்டான்; எனா - என்று கூறி; உம்பியை உற்றாய் - உன் தம்பியை (எதிர்த்துப் போரிட) வந்தாய்; ஊழி காணும் நீ - ஊழிக் கால முடிவையும் கண்டு வாழவேண்டிய நீ; இற்றாய்- இறந்துவிட்டாய். நான் உனை என்று காண்கெனோ - இனி நான் உன்னை எப்பொழுது காண்பேனோ?
இராமன் துணை பெற்று வந்தான் எனத் தாரை கூறிய மொழிகள் - 3958, 3964ல் காண்க. அன்னது செய்கலான் - 3956 முதல் 3965 முடிய உள்ள பாடல்களின் கருத்துக்கள். 'ஊழி காணும் நீ' எனத் தாரை நினைத்தது போல், மண்டோதரியும் 'ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன்' (9943) என எண்ணியது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I told you beforehand; you would not take my word,
- saying, 'He is free of passions, he would not do such a thing,'
- and you went against your brother; you who should have seen the end of the age
- are dead; when shall I see you again?"
What the poem says
Before the fight, Tārai had warned Vāli that Irāmaṉ had come as Cukkirīvaṉ's ally. Vāli refused to listen, insisting that Irāmaṉ, being free of partiality, would never do such a thing, and went out to fight his brother.
Now he who should have lived to see the end of the world is dead, and she will never see him again. The commentary compares Maṇṭōtari's later grief over Irāvaṇaṉ, whom she too had thought could never die.