கம்பராமாயணம் 4197 · கிட்கிந்தா 7.175
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ நெருக்கினால் - நீ (உன் மார்பொடு பொருந்த) நெருக்கித் தாக்குவாயானால்; மேருவும் நீறு ஆம் - மேருமலையும் பொடியாய் விடும்; ஓர் வாளி - (அங்ஙனமிருக்க) ஓர் அம்பு; மாறு - உனக்கு எதிராக; உன் மார்பை ஈர்வதோ - உன்னுடைய மார்பைப் பிளந்து விடுவதா? யான் இது தேறேன் - நான் இதனை உண்மையெனத் தெளிய மாட்டேன். தேவர் மாயமோ - இது தேவர்கள் செய்த மாயச் செயலோ? விளிந்துளான் - (அல்லது) இங்கே இறந்து கிடப்பவன்; வேறு ஓர் வாலி கொலாம் - (நீயன்றி) வேறொரு வாலி தானோ?
மேருமலையினையும் பொடியாக்க வல்ல வாலியின் மார்பின் வலிமையை நன்கு அறிந்த தாரை, தன் கணவன் அம்பு பட்டு இறந்து கிடப்பதை நேரில் கண்டும் நம்புதற்கு இயலாதவளாய் 'இது தேவர் செய்த மாயமோ? அல்லது இறந்து கிடப்பவன் தன் கணவன் அல்லாத மற்றொரு வாலியோ' என ஐயுற்றுக் கலங்கினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If you pressed against it, even Mount Mēru would turn to dust;
- could a single arrow, set against you, split your chest?
- I cannot believe this. Is it some trick of the gods?
- Or is the one who lies dead here some other Vāli?"
What the poem says
Tārai knew the strength of Vāli's chest: it could crush Mount Mēru, the golden mountain at the centre of the world, to powder. Even with his body before her, she cannot believe a single arrow has killed him.
In her bewilderment she wonders whether this is an illusion conjured by the gods, or whether the dead monkey is some other Vāli and not her husband.