கம்பராமாயணம் 4200 · கிட்கிந்தா 7.178

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றாள் - என்று புலம்பினளாய தாரை; இன்னன பன்னி - இத்தன்மையனவான சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லி; இன்னலோடு ஒன்று ஆனாள் - துன்பத்தோடு ஒன்று பட்டவளாய்; உணர்வு ஏதும் உற்றிலாள் - தன் உணர்வு சிறிதும் அடையாதவளாய்; நின்றாள் - செயலொழிந்து நின்றாள்; அந்நிலை நோக்கி - (தாரையின் அந்த நிலைமையைக்) கண்டு; நீதி சால் - நீதி நிறைந்தவனும், வன்தாள் - வலிய ரர ட ன மால்வரை அன்ன மாருதி- பெரிய மலையினை ஒத்த தோற்றமுடைய அனுமன்...

இப்பாடல் அடுத்த இரு பாடல்களோடு குளகமாய் இயைந்து வினை முடிபு கொள்ளும். அனுமன் நீதி நெறியும் வலிய முயற்சியும் உடையவன் என்பதைச் சுக்ரிவனை இராமனிடம் நட்புக் கொள்ளச் செய்த நிலையிலிருந்தே அறியலாம். மாருதிக்கு மால் வரை உவமை. "பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத தன் உருக்கொண்டு நின்றான்" (8781) என்ற உவமை காண்க. 'மேரு மலை போன்ற பொன்மேனியுள்ளவன்' என அனுமன் கூறப்படுவதால் வரை இங்கே மேரு மலை எனலாம். அழித்தற்கு அருமை, அளக்க முடியாத நிலை, தோற்றம், வலிமை, பெருமை ஆகியவற்றால் அனுமனுக்கு மலை உவமை ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So she spoke, repeating such words, and became one
  2. with her grief; she lost all awareness
  3. and stood there. Seeing her state, he who is full of justice,
  4. Māruti, like a great mountain on firm footing,

What the poem says

Tārai's lament ends; she stands stunned, overwhelmed by sorrow. Māruti, that is Aṉumaṉ, son of the Wind god, steps in.

This verse is the first of a three-verse sentence whose verb comes later. Aṉumaṉ is likened to a great mountain, probably golden Mēru, for his size, strength and steadiness. His wisdom has already shown itself in bringing about the alliance between Cukkirīvaṉ and Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟāḷ, iṉṉaṉa paṉṉi, iṉṉalōṭu
oṉṟu āṉāḷ; uṇarvu ētum uṟṟilāḷ;
niṉṟāḷ; an nilai nōkki, nīti cāl,
vaṉ tāḷ māl varai aṉṉa māruti,