கம்பராமாயணம் 4209 · கிட்கிந்தா 8.6

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் மா மெளலி புனைந்து - (சுக்கிரீவன்) பொன்னாலான சிறந்த மணிமுடியைத் தரித்துக்கொண்டு; பொய் இலான்தன் - பொய்ம்மொழி பேசாதவனான இராமனின்; மானக் கழல் தாழும் வேலையில் - பெருமை பொருந்திய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய பொழுது; முற்றிய சொல்லின் எல்லையான் - நிறை மொழியின் எல்லையில் நிற்பவனாகிய; நாயகன் - தலைவனுமான இராமன்; நன் மார்பில் தழுவுற்று - (அவனைத்) தன் நல்ல மார்போடு அணைத்துக் கொண்டு; சொன்னான் - (அறிவுரைகளைக்) கூறலானான்.

சுக்கிரீவனுக்கு வாக்கு அளித்தவாறு வாலியைக் கொன்று நாட்டாட்சியைக் கொடுத்துத் தான் கூறியதைத் தவறாது நிறைவேற்றி வைப்பவனாதலின் இராமனைப் 'பொய்யிலான்' என்றார். முற்றிய சொல்லின் எல்லையான் என இராமனின் பரத்துவ நிலை குறிக்கப்பட்டது. அயோத்தியில் முடிசூடும் முன் வசிட்டர் இராமனுக்குக் கூறியதையும், சித்திர கூடத்தில் இராமன் பரதனுக்குக் கூறியதையும், இங்குச் சுக்கிரீவனுக்கு இராமன் கூறுவதையும் காண்கையில் முடிசூடும் ண்ட் ஆன்றோர் அறவுரை பகர்தல் மரபு என்பது புலனாகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When, wearing the great golden crown, he bowed
  2. to the honoured feet of him who knows no falsehood,
  3. the lord took him to his noble breast
  4. and spoke, he who is the furthest limit of perfect speech.

What the poem says

The newly crowned Cukkirīvaṉ falls at Irāmaṉ's feet. Irāmaṉ embraces him and begins to instruct him in kingship.

Irāmaṉ is called "the one without falsehood" because he kept his promise to kill Vāli and give Cukkirīvaṉ the throne. The commentary notes the custom of giving counsel to a king at his coronation, as Vacistha did for Irāmaṉ in Ayōttī and as Irāmaṉ himself did for Paratan.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ mā mauli puṉaintu poy ilāṉ
taṉ māṉak kaḻal tāḻum vēlaiyil
naṉ mārpil taḻuvuṟṟu nāyakaṉ
coṉṉāṉ muṟṟiya colliṉ ellaiyāṉ.