கம்பராமாயணம் 4208 · கிட்கிந்தா 8.5

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறையோர் ஆசி வழங்க - வேதம் அறிந்த அந்தணர்கள் வாழ்த்துக் கூற; வானுளோர் - தேவலோகத்திலுள்ள தேவர்கள்; நறைதோய் நாள்மலர் தூவ - தேன் நிறைந்த அன்றலர்ந்த மலர்களைத் தூவ; நல் நெறிக்கு இறையோன் தன் - சிறந்த ஒழுக்கத்திற்குத் தலைவனான இராமனுடைய; இளையோன் - தம்பியான இலக்குவன்; அவ் ஏந்தலை - பெருமைக்குரிய அந்தச் சுக்கிரீவனுக்கு; துறையோர் நூல்முறை - நெறிமுறைகளில் வல்லவர்கள் கூறிய நூல்களில் கூறிய முறைப்படி; மெளலி சூட்டினான் - முடி சூட்டினான்.

இராமன், நல்நெறிக்கு இறையோன் என்பதை நூல் முழுவதிலும் காணலாம். 'தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான்' (1709), 'நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்!' (2429), 'புவிக்கு எலாம் வேதமே அன இராமன்' (1453), 'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்? உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?' (3689), 'உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் கண்டு கொண்டேன்' (4066), 'அறநெறி நிறுத்த வந்தது' (4073), 'அறத்தை முற்றும் காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி' (7421) என்பன காண்க.

வான்மீகத்தில் இந்த முடிசூட்டு விழா மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the Brahmins who know the Vedas gave their blessings and those in heaven
  2. showered fresh flowers dripping with honey, the younger brother
  3. of the lord of the righteous path crowned that great one
  4. according to the books of those versed in the rites.

What the poem says

The coronation is completed. To Vedic blessings and a shower of heavenly flowers from the gods, Ilakkuvaṉ places the crown on Cukkirīvaṉ's head as the texts of ritual prescribe.

Irāmaṉ is called the lord of the righteous path, a theme the commentary traces through many verses of the poem. Vālmīki describes this coronation at much greater length.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaiyōr āci vaḻaṅka vāṉuḷōr
naṟai tōy nāḷmalar tūva nal neṟikku
iṟaiyōṉtaṉ iḷaiyōṉ av ēntalai
tuṟaiyōr nūl muṟai mauli cūṭṭiṉāṉ.