கம்பராமாயணம் 4207 · கிட்கிந்தா 8.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் - (சுக்கிரீவனை) நீராட்டுவதற்கு வேண்டிய புண்ணிய தீர்த்தம் முதலான மங்கலப் பொருள்களும்; எண்ணும் பொன்முடி ஆதி யாவையும் - எல்லோராலும் நன்கு மதிக்கப்படும் பொன்னால் செய்த மணிமுடி முதலிய எல்லாப் பொருள்களும்; நண்ணும் வேலையில் - வந்து சேர்ந்த அளவில்; நம்பி தம்பியும் - சிறந்தவனான இராமனின் தம்பி இலக்குவனும்; செம்மலை - பெருமையுடைய சுக்கிரீவனுக்கு; திண்ணம் செய்வன செய்து - (முடிசூட்டும் முன்) தவறாது செய்யவேண்டிய செயல்களைச் செய்து...
மண்ணும் நீர் முதல் மங்கலம் - மங்கல நீராடலுக்கு வேண்டிய நீர் முதலியன. செம்மலை - உருபு மயக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the waters for the ritual bath and the other auspicious things
- and the esteemed golden crown and all the rest
- had arrived, the younger brother of that noble one
- did for the hero all that must surely be done,
What the poem says
The sacred waters for the ceremonial bath, the golden crown and the other auspicious items are brought. Ilakkuvaṉ, the younger brother of the noble Irāmaṉ, performs for Cukkirīvaṉ all the preliminary rites that must precede a coronation.
The sentence continues into the next verse.