கம்பராமாயணம் 4219 · கிட்கிந்தா 8.16

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆக்கமும் கேடும் - செல்வமும் அதன் அழிவும்; தாம் செய் - அவ்வவ் உயிர்கள் செய்யும்; அறத்தோடு பாவம் ஆய - புண்ணிய, பாவங்களால் அமைவன. போக்கி - அக்காரணங்களை விடுத்து; வேறு உண்மை- பிறிதொரு காரணம் இருப்பதை; பொரு அரும் புலமை நூலோர் - ஒப்பற்ற அரிய புலமையுடைய அறிஞர்கள்; தேறார் - தெளிய மாட்டார்கள். தக்கோய் - (ஆகவே) தகுதி வாய்ந்தவனே! ஒன்றோடு ஒன்று தாக்கின - (அவ் அறமும் பாவமும்) ஒன்றோடொன்று மோத; தருக்குறும் செருவில் - செருக்கடைவதற்கான போரில்; பாக்கியம் அன்றி - நன்மைக்குக் காரணமான நல்வினையைச் செய்வதன்றி; பாவத்தை என்றும் பற்றலாமோ - தீமையைத் தரும் தீய காரியத்தை மேற்கொள்ளலாமோ?

ஆக்கத்திற்குக் காரணம் அறம். அதன் அழிவிற்குக் காரணம் பாவம். ஆகவே கடைப்பிடிப்பதற்குரிய அறம், விடுதற்குரியது பாவம் எனக் கூறப்பட்டது. 'ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தோடு பாவம் ஆய'- என்பதில் நேர்நிரல் நிறையணி அமைந்துள்ளது. 'அறத்திறனாலே எய்தனை அன்றோ? அது நீயும், புறத்தினாலே பின்னும் இழக்கப் புகுவாயோ' (3240); 'ஏவல் எவ்உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்! பாவமோ? முன் செய்த தருமமோ? தெரியப் பாராய்' (5198), 'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு' (குறள் - 31) என்பன காண்க. வாலி சுக்கிரீவன் போரில் இராமன் வாலியுடன் சேராமல் சுக்கிரீவனோடு சேர்ந்ததைப் பாடலின் இறுதி அடியொடு ஒப்பிட்டுக் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Prosperity and ruin come from the merit and sin one does;
  2. beyond these the learned of matchless wisdom accept no other cause.
  3. In battle, where the two clash together in pride, worthy one,
  4. should one ever take the side of sin rather than of good fortune?"

What the poem says

Prosperity comes from merit and ruin from sin; the wise know no other cause. So when good and evil clash, one should always side with the good.

The commentary suggests a reference to recent events: in the battle between the brothers, Irāmaṉ took the side of Cukkirīvaṉ, the wronged party, rather than Vāli. It also notes the figure of ordered correspondence in the first line: prosperity matches merit, ruin matches sin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ākkamum, kēṭum, tām cey aṟattoṭu pāvam āya
pōkki, vēṟu uṇmai tēṟār, poru arum pulamai nūlōr;
tākkiṉa oṉṟōṭu oṉṟu tarukkuṟum ceruvil, takkōy!
pākkiyam aṉṟi, eṉṟum, pāvattaip paṟṟalāmō?'