கம்பராமாயணம் 4220 · கிட்கிந்தா 8.17

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இன்னது தகைமை என்ப;இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி, என்கண்வருவுழி, மாரிக் காலம்
பின்னுற, முறையின், உன்தன்பெருங்கடற் சேனையோடும்
துன்னுதி, போதி'என்றான்சுந்தரன்; அவனும் சொல்வான்.

பொருள் · Meaning in Tamil

இன்னது தகைமை என்ப - மேற்கூறிய இவை (அரசர்க்கு) முறைமையாமென்று (அறிஞர்) கூறுவர்; இயல்புளி - (ஆதலால்) நூல்களில் கூறிய இயல்பின்படி; மரபின் எண்ணி - முறைப்படி ஆராய்ந்து; மன் அரசு இயற்றி - சிறப்பாக ஆட்சியை நடத்தி; மாரிக் காலம் பின்னுற - மழைக்காலம் கழிந்த பின்பு; என் கண் மருவுழி - என்னிடம் வரும் பொழுது; முறையின் - முறைப்படி; உன்தன் பெருங்கடல் சேனையோடும் - உனது பெரிய கடல் போன்ற சேனையோடு, துன்னுதி - (என்னிடம்) வந்து சேர்வாய்; போதி - இப்பொழுது செல்வாய்; என்றான் சுந்தரன் - என்று கூறினான் அழகான இராமன்; அவனும் சொல்வான் - (அதுகேட்டு) அச்சுக்கிரீவனும் கூறுவான்:

இராமன் சுக்கிரீவனுக்குக் கூறிய அரசியலுக்குரிய அறவுரைகளை வசிட்டர் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்களோடு (1417, 1424) ஒப்பு நோக்குக. இவ்வித அரசியல் அறவுரை சுக்கிரீவன் முதலானோர்க்கு இராமன் கூறியதாக வான்மீகத்தில் இல்லை.

சீதையைத் தேடுதற்கு மழைக்காலம் வசதியற்றதாக இருக்குமாதலின் 'மாரிக் காலம் பின்னுற' என்றான். தமிழில் ஆவணி, புரட்டாசி மாதங்கள் கார்காலம் என்பர். எனினும், ஆவணிக்கு முன்னரும், புரட்டாசிக்குப் பின்னரும் கார்காலத் தொடர்பு இருப்பதால் இந்நான்கு மாதங்களையும் மாரிக்காலம் என்றே வழங்குவர். வான்மீகத்திலும் இவ்வாறே கொள்ளப்பட்டது. 'சுந்தரன்' என இராமன் குறிக்கப் பெறல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Such is the proper way, they say. Weighing things by rule and custom,
  2. rule your kingdom well, and when you come to me, once the rainy season
  3. is behind us, come in due order with your great
  4. sea-like army; now go," said the beautiful one. And he replied:

What the poem says

Irāmaṉ ends his instruction. Cukkirīvaṉ should rule well, and when the rainy season is over, a bad time for searching for Cītai, he should return with his vast army. Then Irāmaṉ dismisses him, and Cukkirīvaṉ begins to answer.

The commentary explains that the four months of the monsoon were reckoned as the rainy season, as in Vālmīki. It also notes that this whole discourse on kingship does not occur in Vālmīki.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉṉatu takaimai eṉpa; iyalpuḷi marapiṉ eṇṇi,
maṉ aracu iyaṟṟi, eṉ kaṇ maruvuḻi, mārik kālam
piṉṉuṟa, muṟaiyiṉ, uṉtaṉ peruṅ kaṭaṟ cēṉaiyōṭum
tuṉṉuti, pōti' eṉṟāṉ cuntaraṉ; avaṉum colvāṉ.