கம்பராமாயணம் 4221 · கிட்கிந்தா 8.18

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'குரங்கு உறை இருக்கை என்னும்குற்றமே குற்றம் அல்லால்,
அரங்கு உறு துறக்க நாட்டுக்குஅரசு எனல் ஆயது அன்றே,
மரம் கிளர் அருவிக் குன்றம்?வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய,இருத்தியால் சில நாள், எம்பால்.'

பொருள் · Meaning in Tamil

வள்ளல் - வண்மைக் குணம் உடையவனே! மரம்கிளர் அருவிக் குன்றம் - மரங்கள் விளங்குகின்ற அருவிகளை உடைய கிட்கிந்தை மலை; குரங்கு உறை இருக்கை - குரங்குகள் வாழ்கின்ற இடம்; என்னும் குற்றமே குற்றம் அல்லால்- என்று கூறப்படும் ஒரு குற்றத்தை உடையதே அல்லாமல்; அரங்கு எழு துறக்க நாட்டுக்கு - (பிற சிறப்புக்களால்) சபைகள் பொருந்திய தேவர் உலகத்துக்கே; அரசு எனல் ஆகும் அன்றே - தலைமை கொண்டு மேம்பட்டதென்று கூறத்தக்கதல்லவா? நீ- (அதனால்) நீ; மனத்தின் எம்மை இரங்கிய பணி - உன் மனத்தில் எங்கள் பால் இரக்கங் கொண்டு கட்டளையிடும் வேலைகளை; யாம் செய்ய - நாங்கள் செய்ய; சில நாள் எம்பால் இருத்தி - சில நாட்கள் எம்முடன் இருப்பாயாக.

அரங்கு - சுதர்மை முதலிய தெய்வ சபைகள். நில, நீர்வளம் பெற்று வாழ்வதற்கு உரிய வசதிகள் கொண்ட இடமாதலின் 'மரம்கிளர் அருவிக் குன்றம்' எனப்பட்டது. வள்ளல் - அண்மை விளி; இழந்த மனைவியையும் அரசினையும் தனக்கு அளித்தது கருதிக் கூறியது. கிட்கிந்தையைக் குரங்குகள் வாழும் இடம் என ஒரு குறை கூறலாமேயன்றி அது சுவர்க்கத்தினும் மேம்பட்டது என்பதால் இராமனை அவ்விடம் தங்குமாறு சுக்கிரீவன் வேண்டினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Apart from the one fault that it is a dwelling where monkeys live,
  2. is not this hill, with its trees and leaping waterfalls, fit to be called
  3. a king among the heavens with their assembly halls? Generous one, stay with us
  4. a few days, so that we may do the tasks your kind heart sets us."

What the poem says

Cukkirīvaṉ begs Irāmaṉ to come and stay in Kiṭkintai for a while. The hill city, with its trees and waterfalls, has only one fault: it is a home of monkeys. In every other way it rivals heaven itself, with its divine assembly halls.

He calls Irāmaṉ "generous one" because Irāmaṉ has restored his wife and his kingdom to him, and asks for the chance to serve him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kuraṅku uṟai irukkai eṉṉum kuṟṟamē kuṟṟam allāl,
araṅku eḻu tuṟakka nāṭṭukku aracu eṉal ākum aṉṟē,
maram kiḷar aruvik kuṉṟam? vaḷḷal! nī, maṉattiṉ emmai
iraṅkiya paṇi yām ceyya, iruttiyāl cila nāḷ, empāl.'