கம்பராமாயணம் 4222 · கிட்கிந்தா 8.19

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரிந்தம! நின்னை அண்மி,அருளுக்கும் உரியேம் ஆகிப்
பிரிந்து வேறு எய்தும் செல்வம்வெறுமையின் பிறிது ஒன்றாமோ?
கருந்தடங் கண்ணினாளைநாடல் ஆம் காலம் காறும்
இருந்து, அருள் தருதி எம்மோடு'என்று அடி இணையின் வீழ்ந்தான்.'

பொருள் · Meaning in Tamil

அரிந்தம - பகைவர்களை அழிப்பவனே! நின்னை அண்மி - (நாங்கள்) உன்னைப் புகலடைந்து; அருளுக்கும் உரியேம் ஆகி - (உனது) கருணைக்கும் உரியவர்களாயிருந்து; பிரிந்து - (பின்) உன்னை விட்டுப் பிரிந்து; வேறு எய்தும் செல்வம் - தனியே அனுபவிக்கின்ற செல்வம்; வெறுமையின் பிறிது அன்று ஆம் - வறுமையினும் வேறானதன்று; கருந்தடங் கண்ணினாளை - (ஆதலால்) கரிய பெரிய கண்களை உடைய பிராட்டியை; நாடல் ஆம் காலம் காறும் - தேடுதற்கு ஏற்ற காலம் வருமளவும், எம்மோடு இருந்து அருள் தருதி - (கிட்கிந்தையில்) எங்களோடு இருந்து அருள்புரிவாய்; என்று - என்று கூறி; அடி இணையின் வீழ்ந்தான் - இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

வாலியைக் கொன்ற திறம் பற்றி 'அரிந்தம' என அழைத்தான். இராமனைச் சேர்ந்து பெறும் இன்பத்தை நோக்க, தனியே வேறாகப் பெறும் செல்வம் பெற்றும் பெறாதது போலாகும் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Subduer of enemies! Having come close to you and become worthy of your grace,
  2. is wealth enjoyed apart from you anything other than poverty?
  3. Until the time comes to search for her with large dark eyes,
  4. stay with us and grant us your grace," and he fell at his feet.

What the poem says

Cukkirīvaṉ calls Irāmaṉ "subduer of foes," having just seen him kill Vāli. Wealth enjoyed apart from Irāmaṉ, he says, is no better than poverty.

He asks Irāmaṉ to stay with them until the season is right for searching for Cītai, and falls at his feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arintama! niṉṉai aṇmi, aruḷukkum uriyēm āka
pirintu vēṟu eytum celvam veṟumaiyiṉ piṟitu oṉṟāmō?
karun taṭaṅ kaṇṇiṉāḷai nāṭal ām kālamkāṟum
iruntu, aruḷ taruti emmōṭu' eṉṟu aṭi iṇaiyiṉ vīḻntāṉ.'