கம்பராமாயணம் 4227 · கிட்கிந்தா 8.24

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரை செயற்கு எளிதும் ஆகி - சொல்லுதல் எளியதாகி; அரிதும் ஆம் - கடைப்பிடித்தற்கு அரியதுமான; ஒழுக்கில் நின்றான்- நல்லொழுக்கத்தில் தளராது நிலை நிற்பவனாகிய இராமன்; வீர- (சுக்கிரீவனை நோக்கி) வீரனே! அரசியற்கு உரிய யாவும்- அரசாட்சிக்கு உரிய செயல்கள் எல்லாவற்றையும், ஆற்றுழி ஆற்றி - செய்ய வேண்டிய முறைப்படி செய்து; ஆன்ற திரை செயற்கு உரிய- பெரிய அலைகள் வீசுதற்கு இடமான; சேனைக் கடலொடும் - கடல்போன்ற சேனையொடும்; திங்கள் நான்கில் - நான்கு மாதங்கள் கழிந்த அளவில், என்பால் விரசுக - என்னிடம் வந்து சேர்வாயாக; என்றான் - என்று கூறினான்.

ஒழுக்கம் சொல்லுதற்கு எளிதாயினும் கடைப்பிடித்தற்கு அரிது ஆதலின் 'உரை செயற்கு எளிதும் ஆகி அரிது ஆம் ஒழுக்கு' எனப்பட்டது. 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்' (குறள் 664) என்றதும் காண்க. வனத்தில் இருந்து விரதம் காப்பேன் என்று நியமங்கள் பற்றிப் பேசுவது எளிது ஆயினும் அவற்றைக் கடைப்பிடிப்பது கடினம் என்பது இங்கு உணர்த்தப்பட்டது. அவற்றில் தளராது நிலைத்து நிற்கக் கூடியவன் இராமன் என்பதால் 'ஒழுக்கில் நின்றான்' என இராமன் சிறப்பிக்கப்பட்டான்.

சேனைக் கடல் - உருவகம் - சேனையில் உள்ளாரது வரிசை ஒழுங்கைச் சேனையாகிய கடலுக்கு அலையாகக் கருதுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Doing in due manner all that pertains to kingship, in four months
  2. come quickly to me with the sea of your army, fit to raise great waves;
  3. this I ask of you, hero," said he who stands firm in the conduct
  4. that is easy to speak of and hard to keep.

What the poem says

Irāmaṉ sets a date: after four months, the rainy season, Cukkirīvaṉ should rule as a king must and then come to him with his army, vast as the sea, its ranks like waves.

The poet calls Irāmaṉ the one who abides by conduct that is easy to talk about and hard to practise. The commentary cites the Tirukkuṟaḷ (664): anyone can speak, but few can do what they say.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'araciyaṟku uriya yāvum āṟṟuḻi āṟṟi, āṉṟa
tirai ceyaṟku uriya cēṉaik kaṭaloṭum tiṅkaḷ nāṉkiṉ
viracuka, eṉpāl; niṉṉai vēṇṭiṉeṉ, vīra!'eṉṟāṉ,
urai ceyaṟku eḷitum āki, aritum ām oḻukkil niṉṟāṉ.