கம்பராமாயணம் 4226 · கிட்கிந்தா 8.23

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இல்லறம் துறந்திலாதோர்- மனை அறத்திற்கு உரிய நெறியைக் கைவிடாதவர்களுடைய; இயற்கையை இழந்தும் - இயல்பினைக் கை விட்டு நீங்கியும்; போரின் வில் அறம் துறந்தும் - போரில் வில் பிடித்து இயற்றும் அறத்தை விடுத்தும்; வாழ்வேற்கு - வாழ்பவனாகிய எனக்கு; இன்னன - இத்தகையன (நகரத்தில் நண்பர்களோடு இனிதாக இருத்தல் போன்றன); மேன்மை இல்லாச் சில் அறம் - சிறப்பில்லாத அற்ப ஒழுக்கங்களாகும்; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு - நான் செய்துள்ள தீமைகள் நீங்குமாறு; நல் அறம் தொடர்ந்த நோன்பின் - நல்ல அறத்தோடு பொருந்திய விரதத்தில் நின்று; நவை அற நாளும் நோற்பல் - குற்றம் நீங்க ஒவ்வொரு நாளும் தவம் செய்வேன்.

மனைவியைக் காத்தல் இல்லறத்தின் தருமமாகும். தான் மனைவியைப் பாதுகாவாது விட்டமை பற்றி 'இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும்' என்றான். தான் பூண்ட மானுட வேடத்திற்கேற்ப நடந்துகொள்வதால், தன் தெய்வத் தன்மையைப் பாராட்டாமல் இராமன் 'புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு நோற்பல்' என்றான். வில்லறம் துறந்தமை, வாலியை மறைந்துநின்று கொன்றதைக் குறித்தது எனலுமாம். இல்லறக் கடமையில் தவறியதோடு வில்லறச் செம்மையும் தன்மாட்டு இல்லையென்பதால் அப்பிழைகள் நீங்க நோன்பு செய்வதாக இராமன் கூறினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "For me, who live having lost the way of those who never forsook the household life,
  2. and having forsaken the dharma of the bow in battle, such things are
  3. petty virtues, without merit. So that the wrongs I have done may be removed,
  4. I will do penance every day, keeping a vow joined to true dharma, until I am free of fault."

What the poem says

Irāmaṉ blames himself. He failed in the householder's first duty, protecting his wife. The commentary adds that "forsaking the dharma of the bow" may refer to his killing Vāli from hiding. Comfortable living in a city would be a petty indulgence for one in his position.

Instead he will keep his vow and do penance daily to atone for his faults. Playing his human role fully, Irāmaṉ does not claim the privileges of divinity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'illaṟam tuṟantilātōr iyaṟkaiyai iḻantum, pōriṉ
vil aṟam tuṟantum vāḻvēṟku, iṉṉaṉa mēṉmai illāc
cil aṟam; purintu niṉṟa tīmaikaḷ tīrumāṟu,
nal aṟam toṭarnta nōṉpiṉ, navai aṟa nōṟpal nāḷum.'