கம்பராமாயணம் 4225 · கிட்கிந்தா 8.22

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவி - என் தேவியான சீதை, வேறு - தனியாய்; அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப - இராவணன் கொண்டுபோய் வைத்த காவலில் இருக்க; தான் தன் - தான், தன்னுடைய; ஆவிபோல் துணைவரோடும் - உயிர் போன்ற நண்பர்களோடு; அளவிடற்கு அரிய இன்பம் - அளவிடமுடியாத அரிய இன்பத்தை; இராமன் மேவினான்- இராமன் விரும்பினான்; என்றால் - என்று மக்கள் கூற நேர்ந்தால்; ஐய - ஐயனே! இவ்வெய்ய மாற்றம் - இந்தக் கொடிய சொல்; மூவகை உலகம் - (மேல், கீழ், நடு எனும்) மூன்று வகைப்பட்ட உலகங்களும், முற்றும் காலத்தும் - அழியுங் காலத்திலும்; முற்றவற்றோ - முடிய வல்லதாகுமோ? (அந்தப் பெரும்பழி உலகங்கள் அழிந்தாலும் அழியாது).

உலகம் முற்றும் காலம் - ஊழிக்கால முடிவு. அரக்கனது சிறைக் காவலில் இருக்க, இராமன் தன் நண்பர்களோடு இன்பங்களை விழைந்தான் என்று உலகம் கூறும் பழிச்சொற்கு இராமன் அஞ்சினான் என்க. மேவுதல் - விரும்புதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If they say: 'While his queen lives apart, in the keeping where the demon placed her,
  2. Irāmaṉ, with friends dear as his own life, enjoyed
  3. pleasures beyond measure,' my friend, would this cruel report
  4. come to an end even when the three worlds come to an end?"

What the poem says

Irāmaṉ fears the shame it would bring. If people said he feasted with friends while his wife was held captive by Irāvaṇaṉ, that disgrace would outlast even the destruction of the three worlds at the end of time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"tēvi vēṟu arakkaṉ vaitta cēmattuḷ iruppat tāṉ taṉ
āvipōl tuṇaivarōṭum aḷaviṭaṟku ariya iṉpam
mēviṉāṉ irāmaṉ" eṉṟāl, aiya! iv veyya māṟṟam
mūvakai ulakam muṟṟum kālattum muṟṟa vaṟṟō?'