கம்பராமாயணம் 4224 · கிட்கிந்தா 8.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாழியாய் - வாழ்வை உடையவனே! ஏழ் இரண்டு ஆண்டு - பதினான்கு வருட காலம்; யான் போந்து எரி வனத்து இருக்க - நான் சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக; ஏன்றேன் - ஏற்றுக் கொண்டேன்; அரசர் வைகும் வளநகர் - அரசர்கள் வாழும் செல்வ வளம் வாய்ந்த நகரில்; வைகல் ஒல்லேன் - தங்குவதற்கு உடன்படேன். பாழி அம் தடந்தோள் வீர - (மேலும்) வலிமை வாய்ந்த அழகிய பெரிய புயங்களை உடைய வீரனே! யாழ் இசை மொழியோடு அன்றி - யாழின் இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல்; யான் உறும் இன்பம் என்னோ - நான் அடையும் இன்பம் யாதோ?
பார்த்திலை போலும் - (நீ இதனை) எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்!
வாலி இறந்தபிறகு, கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும் என வேண்டியவன் அனுமன் என்கிறது வான்மீகம்; சுக்கிரீவன் அழைப்பதாக அங்குச் செய்தி இல்லை. தந்தை கட்டளையின்படி பதினான்கு ஆண்டுகள் காட்டில் உறைதல் வேண்டும், நகரினுள்ளாவது ஊரினுள்ளாவது புகுதல் தகாது எனக் கூறி சுக்கிரீவன் வேண்டுகோளை மறுக்கிறான், இராமன்.
எரிவனம் - வெயிலின் கடுமையால் தீப்போல் சுடுகின்ற காடு. சீதையின் சொல்லுக்கு யாழ் உவமை. 'குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே' (2073); 'குழலும் யாழும், கொழும்பாகும் அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழி!' (3569) என்பன காண்க. இராமனுக்குச் சீதையோடன்றித் தனியே எய்தும் இன்பம் இன்பமாகாது. அன்று ஏ- அசை நிலைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "For twice seven years I agreed to go and live in the burning forest;
- long may you live! I may not stay in a rich city where kings dwell.
- Hero of strong and handsome broad shoulders, have you not seen this?
- Apart from her whose voice is the music of the lute, what joy can I have?"
What the poem says
Irāmaṉ explains. He promised to spend fourteen years in the harsh forest, and he will not stay in any city of kings. Besides, without Cītai, whose voice is as sweet as the yāḻ lute, no pleasure can mean anything to him.
The commentary notes that in Vālmīki it is Hanumān who invites Rāma into the city, and Rāma declines because his father's command forbids him to enter any town or village.