கம்பராமாயணம் 4229 · கிட்கிந்தா 8.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்டு மலரடி வணங்கினானை - அப்பொழுது தன் மலர் போன்ற திருவடிகளில் வணங்கியவனான; வாலி காதலனும் - வாலியின் மகனான அங்கதனையும்; நீலமாமேகம் அன்ன நெடியவன் - நீல நிறம் வாய்ந்த சிறந்த மேகத்தையொத்த பெரியவனான இராமன்; அருளின் நோக்கி - கருணையோடு பார்த்து; நீ சீலம் உடையை ஆதல் - 'நீ ஒழுக்கம் உடையவன் ஆகுக; இவன் சிறு தாதை என்னா - இந்தச் சுக்கிரீவனை உன் சிறிய தந்தை என்று கருதாமல்; மூலமே தந்த நுந்தை ஆம் என - உன் பிறப்பிற்குக் காரணமாகிய உன் தந்தையாகவே கொண்டு; முறையின் நிற்றி - அவன் கட்டளைப்படி நிற்பாயாக!
இப்பாடல் அடுத்த பாடலில் உள்ள 'என்றான்' என்பதனோடு இயையும். வணங்கினான் (ஆகிய) வாலி காதலனையும் என உருபு பிரித்துக் கூட்டுக. நீல மேகம் இராமனுக்கு உவமை. நெடியவன் - பெருமைக்குரியவன்; மாவலின் பொருட்டு நீண்டனுமாம். ஆதல் என்பதற்கு ஆதலால் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vāli's beloved son too bowed there at his flower feet;
- the tall one, like a great dark-blue cloud, looked on him with grace:
- "You are a person of good conduct; so do not think of him as your uncle,
- but as the father who gave you your very being, and stand by him in due order,"
What the poem says
Aṅkataṉ bows to Irāmaṉ before leaving. Irāmaṉ, dark as a rain cloud, looks on him kindly and tells him to treat Cukkirīvaṉ not merely as his uncle but as his own father, and to obey him.
The sentence ends in the next verse. The commentary notes that "the tall one" can also recall Viṣṇu, who grew immense to take back the worlds from the demon king Mahābali.