கம்பராமாயணம் 4230 · கிட்கிந்தா 8.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ன மற்று - என்று மேலும்; இனைய கூறி - இத்தகைய வார்த்தைகளைக் கூறி; அவன் - தொடர ஏகு என்றான் - 'அந்தச் சுக்கிரீவனைத் தொடர்ந்து செல்வாயாக' என்று கூறினான்; மற்று - அதன் பின்; அப்புகழுடைக் குரிசில் - புகழ் பொருந்திய சிறந்த அங்கதன்; பொன் அடி வணங்கி - (இராமனுடைய) பொன் போன்ற பாதங்களில் வணங்கி; போனான் - கிட்கிந்தை நகருக்குச் சென்றான்; பின்னர் மாருதியை நோக்கி - அதற்குப் பிறகு (இராமன்) அனுமனைப் பார்த்து; 'பேர் எழில் வீர- மிக்க அழகையுடைய வீரனே; நீயும் - நீயும் (சென்று); அன்னவன் அரசுக்கு ஏற்றது - அச்சுக்கிரீவனது அரசாட்சிக்கு ஏற்ற காரியங்களை; அறிவின் ஆற்றுதி - உன் அறிவினால் செய்வாயாக; என்றான்- என்று சொன்னான்.
அ - பண்டறி சுட்டு; அனுமன் அழகு மிக்கவன் என்பதால் 'பேர் எழில் வீர' என விளித்தான். அனுமனுக்குச் சுந்தரன் என்னும் ஒரு பெயர் உண்டு. உருவ அழகு, வீரம், அறிவு ஆகிய மூன்றிலும் அனுமன் சிறந்தவன் என்பதை இராமன் கூற்றால் அறிய முடிகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having said these and other such words, he told him, "Go, follow him";
- and bowing at his golden feet, that famed young lord departed.
- Then, looking at Māruti: "Hero of great beauty, you too
- must do with your wisdom what befits that man's kingdom," he said.
What the poem says
Irāmaṉ sends Aṅkataṉ after Cukkirīvaṉ, and the prince bows and leaves for the city. Then Irāmaṉ turns to Aṉumaṉ and asks him too to go and serve Cukkirīvaṉ's kingdom with his wisdom.
He addresses Aṉumaṉ as "hero of great beauty." The commentary notes that one of Aṉumaṉ's names is Cuntaraṉ, "the beautiful," and that Irāmaṉ's words credit him with beauty, valour and intelligence alike.