கம்பராமாயணம் 4234 · கிட்கிந்தா 8.31

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆழியான் அனைய கூற,'ஆணை ஈது ஆகின், அஃதே,
வாழி! யான் புரிவேன்'என்று,வணங்கி மாருதியும் போனான்;
சூழிமால் யானை அன்னதம்பியும் தானும், தொல்லை
ஊழி நாயகனும், வேறு ஓர்உயர்தடங் குன்றம் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆழியான் - சுதரிசனம் என்னும் சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரமான இராமன்; அனைய கூற - அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல; மாருதியும் - (அது கேட்டு) அனுமனும்; வாழி - (இராமனை நோக்கி) வாழ்வாயாக! ஆணை ஈது ஆயின் - உன் கட்டளை இதுவாயின்; அஃதே புரிவென் - நான் அதனையே செய்வேன்; என்று வணங்கிப் போனான் - என்று சொல்லி வணங்கி கிட்கிந்தையை நோக்கிச் சென்றான்; தொல்லை ஊழி நாயகனும் - பழமையான பல ஊழிக்காலங்களுக்கும் தலைவனான இராமபிரானும்; சூழிமால் யானை அன்ன தம்பியும் - முகபடாத்தை உடைய பெரிய யானையை ஒத்த தம்பி இலக்குவனும்; தானும் - தானுமாக; வேறு ஓர் உயர் தடங்குன்றம் - உயர்ந்த பெரிய வேறோர் மலையை, உற்றார் - அடைந்தனர்.

அனுமன் இராமன் கட்டளையை ஏற்று விடைபெற்றதும் இராமனும் தம்பியுடன் வேறோர் மலையை அடைந்தான். இந்த மலையைப் பிரசிரவண மலை என்று வான்மீகமும் அத்யாத்ம இராமாயணமும் கூறும். இதற்கு மாலியவான் என்ற பெயருமுண்டு. வாழியாய் - இராமனை 'வாழி' என அனுமன் வாழ்த்தினான் என்பர். அடியவனாகிய அனுமன் இவ்வாறு வாழ்த்துவது முறையா என்றால், பக்தர்கள் அன்பு மேலீட்டால் அங்ஙனம் வாழ்த்துவது மரபாகும். பெரியாழ்வார் திருமாலுக்குப் பல்லாண்டு கூறியதும், பிள்ளைத்தமிழ்களில் பாட்டுடைத் தலைவனாகிய இறைவனுக்குக் காப்புக் கூறி வாழ்த்துவதும் இம்மரபை ஒட்டியே ஆகும். இறைவனை வாழ்த்துவதால், வாழ்த்துவார் நல் வாழ்வு பெறுவர் என்பதை 'வாழ்த்துவதும் வானவர்கள் தான் வாழ்வான்' (திருவாசகம், திருச்சதகம்-20) என்ற அடியால் உணரலாம். அரசனுடன் பேசுகையில் 'வாழ்க' என வாழ்த்திப் பேசும் மரபை இலக்கியங்களில் காணலாம். 'சூழியானை' என்பது நாட்டு யானையைக் குறிக்கும். காட்டில் திரியும் யானை போலன்றி, ஒரு பாகனுக்கு அடங்கி நடப்பது சூழியானை. அதுபோல் இலக்குவனும் அண்ணன் கட்டளைக்கு அடங்கி நடப்பவன் என்ற கருத்தும் புலனாகிறது. ஊழிநாயகன் தம்பியும் தானும் உற்றான் - தலைமை பற்றி வந்த திணை வழுவமைதி. ஆழியான் என்னும் சொல் கடல் போன்றவன், பாற்கடலில் பள்ளி கொள்பவன் என்னும் பொருள் படும் வகையில் அமைந்துள்ள சிறப்பையும் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the lord of the discus had spoken so, saying "If this is your command,
  2. long may you live! I will do it," Māruti bowed and went;
  3. and he, the lord of the ancient ages, with his brother, like a great elephant in its ornamented headdress,
  4. came to another high and broad mountain.

What the poem says

Aṉumaṉ accepts Irāmaṉ's command, blesses him and leaves for Kiṭkintai. Irāmaṉ and Ilakkuvaṉ move to another tall mountain, which Vālmīki and the Adhyātma Rāmāyaṇa call Prasravaṇa, also known as Mālyavān.

The commentary defends Aṉumaṉ's blessing of his lord as an expression of devotion, like Periyāḻvār's hymn wishing Viṣṇu long life. Ilakkuvaṉ is compared to a trained, caparisoned elephant that obeys its keeper, as he obeys his brother. The epithet "lord of the discus" also suggests "the one who lies on the ocean," Viṣṇu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻiyāṉ aṉaiya kūṟa,'āṇai ītu āyiṉ, aḵtē,
vāḻiyāy! purivēṉ' eṉṟu, vaṇaṅki mārutiyum pōṉāṉ;
cūḻi māl yāṉai aṉṉa tampiyum tāṉum, tollai
ūḻi nāyakaṉum, vēṟu ōr uyar taṭaṅ kuṉṟam uṟṟār.