கம்பராமாயணம் 4233 · கிட்கிந்தா 8.30

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆன்றவற்கு உரியது ஆயஅரசினை நிறுவி, அப்பால்,
ஏன்று எனக்கு உரியது ஆயகருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை;ஆகலால், தருமம் தானே
போன்ற நீ, யானே வேண்ட,அத்தலை போதி'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆன்றவற்கு - (எல்லாப் பண்புகளும்) நிறைந்தவனான சுக்கிரீவனுக்கு; உரியது ஆய அரசினை - உரியதான அரசாட்சியை; நிறுவி - நிலைபெறச் செய்து; அப்பால் - அதற்குப் பிறகு; எனக்கு உரியது ஆய கருமமும் - எனக்கு ஆகவேண்டியதான காரியத்தையும்; ஏன்று - ஏற்றுக் கொண்டு; இயற்றற்கு ஒத்த சான்றவர் - செய்வதற்குத் தகுந்த பெரியோர்; நின்னின் இல்லை - உன்னை விட (வேறு எவரும்) இல்லை; ஆதலால் - ஆதலால்; தருமம் தானே போன்ற நீ - அறமே உருவெடுத்தாற் போன்ற நீ; யானே வேண்ட - நான் வேண்டுகின்றபடி; அத்தலைபோதி - அவ்விடத்திற்குச் (சுக்கிரீவனிடம்) செல்லக் கடவாய்; என்றான் - என்று உரைத்தான்.

முன்னிரு பாடல்களில் அனுமனின் பொய்யாமை, அன்பு, பொறுமை, அறிவு ஆகிய பண்புகள் போற்றப்பட, இப்பாடலில் தருமத்தின் வடிவமென அனுமனைக் குறித்தல் காண்க. 'நல் அற வீரன்' (5541) எனப் பின்னரும் கூறுதல் காண்க. தருமத்தின் வடிவமான இராமனால் 'தருமன் தானே போன்ற நீ' என அனுமன் போற்றப்படல் எண்ணிடுன்புறற்பாலது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To establish the kingdom that belongs to that worthy one, and after that
  2. to take up and carry out the work that is mine,
  3. there is none more fit than you; and so, you who are like
  4. dharma itself, since I ask it, go there," he said.

What the poem says

Irāmaṉ entrusts Aṉumaṉ with two tasks: to secure Cukkirīvaṉ's rule, and later to take charge of Irāmaṉ's own mission, the search for Cītai. No one is better suited.

Irāmaṉ, himself dharma in person, calls Aṉumaṉ "like dharma itself," praise the commentary finds delightful. It notes that the previous verses praised his truthfulness, love, patience and wisdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṉṟavarkku uriyatu āya araciṉai niṟuvi, appāl,
ēṉṟu eṉakku uriyatu āya karumamum iyaṟṟaṟku otta
cāṉṟavar niṉṉiṉ illai; ātalāl, tarumamtāṉē
pōṉṟa nī, yāṉē vēṇṭa, at talai pōti' eṉṟāṉ.