கம்பராமாயணம் 4232 · கிட்கிந்தா 8.29

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிரம்பினான் ஒருவன் - அரசர்க்குரிய பண்புகள் நிறைந்த ஒப்பற்ற மன்னன் ஒருவன்; காத்த - பாதுகாத்த; இறுதி நின்ற வரம்பு இலாதது - கடை எல்லை இல்லாததும்; நிறை அரசு அதனை - எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை; மற்று ஓர் தலைமகன் - வேறு ஓர் அரசன்; வலிதின் கொண்டால் - வலியக் கைப்பற்றிக் கொண்டால்; நலனும் தீங்கும் அரும்புவ - (அந்த அரசியலில்) நன்மைகளேயன்றித் தீமைகளும் தோன்றுவனவாம்; ஆகலின் - ஆதலால்; ஐய - ஐயனே; நின்போல் பெரும்பொறை அறிவினோரால்- (அத்தகைய ஆட்சி) உன்னைப் போன்ற பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே; நிலையினைப் பெறுவது - நிலை பெறக் கடவதாகும்.

நிரம்பினான்: அரசர்க்கு இன்றியமையாதனவாகக் கூறப்படும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், கல்வி, வீரம் முதலிய நற்பண்புகள் நிரம்பப்பெற்றவன். நிறை அரசு - பல்வேறு வளங்களுடன், பல சிறப்புகளுடன் கூடிய அரசு. வள்ளுவர் குறிப்பிடும் 'இறைமாட்சி, நாடு' அதிகாரக் கருத்துக்களை இங்கே கொள்ளலாம். 'நிரம்பினான்' - ஈண்டு வாலியைக் குறித்தது; 'மற்றோர் தலைமகன்' சுக்கிரிவனைக் குறித்தது. இறுதி நின்ற வரம்பு - அழிவு. முன் பாடலில் அனுமனின் பொய்யில் உள்ளத்தையும், அன்பையும் கூறியவன் இப்பாடலில் அவனது பொறுமையினையும், அறிவையும் உரைத்து அரசியலுக்கு அவனது இன்றியாமையினை உணர்த்தினான். "வெஞ்சின் அரக்கர் ஐவர் புலன்கள் ஒத்தார்; அவனும் நல் அறிவை ஒத்தான்" (5664) எனப்பின்னரும் அனுமன் புகழப்படுவதைக் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When a great kingdom guarded by one man perfect in kingly gifts,
  2. a kingdom without limit or end, is taken by force by another leader,
  3. both good and harm spring up; and so, my friend,
  4. it is through men of great patience and wisdom like you that it stands firm."

What the poem says

Irāmaṉ explains why Aṉumaṉ must go. A rich kingdom long ruled by an accomplished king, here Vāli, has been seized by force by another, here Cukkirīvaṉ. Such a change can bring trouble as well as good.

Only counsellors with Aṉumaṉ's patience and wisdom can make the new reign secure. The commentary notes that Irāmaṉ praised Aṉumaṉ's truthfulness and love in the previous verse, and now his patience and understanding.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nirampiṉāṉ oruvaṉ kātta niṟai aracu iṟutiniṉṟa
varampu ilātataṉai, maṟṟu ōr talaimakaṉ valitiṉ koṇṭāl,
arumpuva nalaṉum tīṅkum; ākaliṉ, aiya! niṉpōl
perum poṟai aṟiviṉōrāl nilaiyiṉaip peṟuvatu ammā!