கம்பராமாயணம் 4242 · கிட்கிந்தா 9.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல் நாரம் - குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக; வேட்கையின் பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்; மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்) வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்; வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையுடைய யானைகளின் உடம்பில்; நிறத்த - அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக் குருதியால் சிவந்த நிறத்தையுடைய, புண் திறப்ப போன்றவே - புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.
கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின் உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன என்பதாம். உவமை அணி. நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது. மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. "நீறணிந்த கடவுள் நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே கூறினமை காண்க. உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும் இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற வேட்கையின் பருகிய' என்றார். பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது; துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம் மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if it were long-aged toddy, the water of the cool sea, with tongues dipped in,
- the clouds drank with craving; and their flashing lightnings
- were like the red wounds gaping open on long-musth elephants
- in a battle where sword-bearing hands are locked together.
What the poem says
The clouds are pictured as drinkers who have greedily lapped up the sea as if it were strong, aged palm toddy, an old poetic idea of clouds drinking from the ocean. Now, swollen and black, they flash with lightning.
The lightning in the dark clouds looks like sword cuts opening red on the dark hides of war elephants, wet with the musth that runs down their temples, in the thick of a battle fought hand to hand. The comparison suits both the colour contrast and the violent, sudden look of the flashes.