கம்பராமாயணம் 4243 · கிட்கிந்தா 9.6

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீல்நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல்நிற முகில் குலம் துவன்றி சூழ்திரை
மால்நிற நெடுங்கடல் வாரி மூரிவான்
மேல் நிறைந்துளது என முழக்க மிக்கதே.

பொருள் · Meaning in Tamil

நீல் நிறப் பெருங்கரி - நீல நிறம் வாய்ந்த பெரிய யானைகளை; நிரைத்த நீர்த்து என - (வானத்தில்) வரிசையாக நிறுத்தி வைத்த தன்மை போல; சூல் நிற முகில் குலம் - (நீரைப் பருகிய) கருக்கொண்ட கரிய நிறமுடைய மேகக்கூட்டம்; துவன்றி - நெருங்கி நின்று; சூழ் திரை - பூமியைச் சூழ்ந்துள்ள; மால் நிற நெடுங்கடல் - கருநிறமுள்ள பெரிய கடலின்; வாரி - தண்ணீர்; மூரி வான் மேல் - (எழுந்து) பெரிய வானத்தின் மேல்; நிரைத்துளது என - பரவி நின்றாற் போல; முழக்கம் மிக்கது - இடி முழக்கம் மிக்கதாயிற்று.

கரிய பெரிய யானைகளை விண்ணில் வரிசையாக நிறுத்தி வைத்தாற் போலச் சூல் கொண்ட கருமேகங்கள் நெருங்கிக் குமுறுவது பெரிய கடல் வானத்தெழுந்து பேரொலி முழக்கியது போலிருந்தது என்பதாம். யானை, கடல் என்னும் இரண்டும் மேகத்திற்குக் கரிய வடிவம், முழக்கம் என்னும் இரண்டிற்கும் ஒப்பாகும். "வீங்கிருள் வேறு இருந்த மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே" (882) என்ற அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. 'அகன் குன்றின் மேல் இம்பர் வாரி எழுந்தது போன்றதே' (14) என்பதும் காண்க. நீல் - நீலம்; நீர்த்து - நீர்மை என்ற பண்புப்பெயர் ஈறு கெட்டது; து - பகுதிப் பொருள் விகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though great dark-blue elephants had been ranged in rows,
  2. the hosts of dark, rain-laden clouds crowded close; and as though the water
  3. of the long dark sea with its encircling waves had risen
  4. and been ranged across the vast sky, the thunder roared all the more.

What the poem says

The massed rain clouds, heavy with water, stand packed together in the sky like rows of huge dark elephants. Their thunder sounds as if the whole dark ocean around the earth had risen up and spread across the heavens, roaring.

The two images cover the clouds' two features: the elephants match their dark bulk, and the ocean matches both their colour and their noise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīl niṟap peruṅ kari niraitta nīrttu eṉa
cūl niṟa mukil kulam tuvaṉṟi cūḻ tirai
māl niṟa neṭuṅ kaṭal vāri mūri vāṉ
mēl niraittuḷatu eṉa muḻakkam mikkatē.