கம்பராமாயணம் 4244 · கிட்கிந்தா 9.7

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெரிந்த மின் எலாம் - வானத்தில் மேகங்களில் காணப்படுகின்ற மின்னல்களெல்லாம்; அரிப் பெரும் பெயரவன் முதலினோர் - அரி என்னும் பெரும்பெயர்க்கு உரியவனாகிய இந்திரன் முதலிய தேவர்களுடைய; அணி விரிப்பவும் ஒத்தன - அணிகலன்கள் ஒளி வீசுவனவற்றையும் நிகர்த்தன; வெற்பு மீது - மலைகள் மீது; தீ எரிப்பவும் ஒத்தன - நெருப்புப் பற்றிப் பொருள்களை எரிப்பவற்றையும் போன்றன; ஏசு இல் ஆசைகள் - பழித்தல் இல்லாத திசைகள்; சிரிப்பவும் ஒத்தன - சிரிக்கும் தன்மையையும் ஒத்திருந்தன.

தேவர்களுடைய அணிகலன்கள் விட்டுவிட்டு ஒளிர்வன போலவும், மலைகளில் மரங்கள் ஒன்றோடொன்று உரசுவதால் ஏற்படும் தீச்சுடர் போலவும், திசைகள் ஒன்றையொன்று பார்த்துச் சிரிக்கும் நகையொளி போலவும் மேகங்களின் மின்னல்கள் விளங்கின என்பதாம். உவமை அணி. இந்திரன் மேகத்தை ஊர்தியாகக் கொண்டவனாதலின், மேகத்திலிருந்து தன் அணிகலன்களை விரித்துப் பார்த்து மகிழ்வதற்கு உரியவன் என்னும் இயைபு நோக்கி அரிப் பெரும் பெயரவன் என்பதற்கு இந்திரன் எனப் பொருள் கொள்ளப்பட்டது. பெரும் பெயர் - புகழ் பெற்ற பெயர்; முதலினோர் - இந்திரன் சுற்றம் என்றும், அட்டதிக்குப் பாலர்கள் என்றும் கொள்வர். அரி - இந்திரன், திருமால், அக்கினி முதலிய பல பொருள் குறிக்கும் வடசொல். ஈண்டு இந்திரனைக் குறித்தது. எதிர் எதிர்த் திசைகளில் மாறி மாறித் தோன்றும் மின்னலுக்கு 'ஆசைகள் சிரிப்பவும் ஒத்தன' என இல்பொருள் உவமை கூறினார். ஏசு - முதனிலைத்தொழிற்பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They were like the jewels of the one with the great name Ari and his company
  2. being spread out to shine; they were like fire burning
  3. upon the mountains; they were like the blameless quarters
  4. laughing; all the lightnings that showed.

What the poem says

Three images for the lightning. It flashes like the ornaments of Indra, here called by his title Ari, and the other gods, displayed and glittering among the clouds, which are Indra's mount. It is like fire flaring on the hills, as when trees rubbing together catch light. And as it flickers from one side of the sky to the other, it is like the directions of space laughing at one another, their flashing teeth showing.

The last is an "impossible" comparison, since directions cannot laugh; the image catches lightning jumping back and forth between opposite horizons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arip perum peyaravaṉ mutaliṉōr aṇi
virippavum ottaṉa; veṟpu mītu tī
erippavum ottaṉa; ēcu il ācaikaḷ
cirippavum ottaṉa; terinta miṉ elām.