கம்பராமாயணம் 4245 · கிட்கிந்தா 9.8

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.

பொருள் · Meaning in Tamil

யாதினும் இருண்ட விண் - எல்லாப் பொருளைக் காட்டிலும் கறுத்த ஆகாயமானது; மாதிரக் கருமகன் - திசையாகிய கருமான்; மாரிக் கார் மழை - மழைக் காலத்துக் கரிய மேகமாகிய; இருந்தைக் குப்பையின் - கரிக்குவியலில்; வெம் கூதிர்க் கால் - கொடிய வாடைக் காற்றாகிய; நெடுந் துருத்திக் கோள் அமைத்து - பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு, ஊது வெங்கனல் - ஊதி எழுப்பிய வெம்மையான நெருப்புச் சுடர்களை; உமிழ் உலையும் ஒத்ததே - வெளிப்படுத்துகிற உலைக்களத்தை ஒத்து விளங்கியது.

திசைகள் கருமானாகவும், கரிய மேகம் கரிக்குவியலாகவும், கூர் துருத்தியாகவும், தீக்கொழுந்துள்ள மின்னலாகவும் உருவகிக்கப்பட்டன. பல பொருள்களைத் தம்முள் இயல்புடையவனாக உருவகித்திருப்பதால் இப்பாடலில் இயைபு உருவக அணி அமைந்துள்ளது. செய்யுள் முழுவதிலும் உருவகம் காணப்படுவதால் முற்று உருவக அணி எனினும் அமையும். இரும்புத் தொழில் செய்யும் கொல்லரைக் கருமகன் என்பர் கரும்பொன் என்ற இரும்பில் பணி செய்வோன் ஆதலின் 'கருமகன்' எனப்பட்டான் போலும். கருமை வலிமையுமாம்; இருந்தை - கரி; 'இருந்தையின் எழு தீ ஒத்து' (2006) என்றது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the quarters as the smith, and the dark clouds of the rainy season
  2. as the heap of charcoal, the sky, darker than anything,
  3. using the fierce cold north wind as the long bellows' force,
  4. was like a forge spitting out the hot fire it fans.

What the poem says

The whole stormy sky becomes a blacksmith's forge. The directions are the smith, the black rain clouds are his heap of charcoal, the cold, biting wind is the great bellows, and the lightning is the flame blown up out of the coals.

The comparison runs through the whole verse as a sustained metaphor. The word for smith, karumakaṉ, literally "worker of the dark metal", fits the dark scene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātirak karumakaṉ mārik kār maḻai
yātiṉum iruṇṭa viṇ iruntaik kuppaiyiṉ
kūtir veṅ kāl neṭun turuttik kōḷ amaittu
ūtu veṅ kaṉal umiḻ ulaiyum ottatē.