கம்பராமாயணம் 4248 · கிட்கிந்தா 9.11

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக;
கண்ணன் மெய்வடிவு எனக் கருகு கார்விசும்பு
உள்நிறை உயிர்ப்பு என ஊதை ஊதின.

பொருள் · Meaning in Tamil

எண் வகை நாகங்கள் - எட்டுத் திசைகளிலும் உள்ள எட்டு வகைப் பாம்புகளும்; திசைகள் எட்டையும் - எட்டுத் திசைகளையும்; நண்ணின - (தாமிருக்கும் பாதலத்தை விடுத்துப் பூதலத்தில் வந்து) அடைந்தனவாய்; நா வளைத்தனைய - தம் நாக்குகளை நீட்டித் திசைகளை வளைத்தாற் போன்று; மின் நக - மின்னல்கள் ஒளி வீச; கார் விசும்பு - கரிய மேகங்கள்; கண்ணுதல் மிடறு எனக் கருகு - நெற்றிக் கண்ணையுடைய சிவபிரானின் கழுத்தின் நிறம் போலக் கறுத்து; உள் நிறை உயிர்ப்பு என - தமக்குள் நிறைந்த மூச்சுக் காற்றை வெளியே விடுத்தாற் போல; ஊதை ஆட்டின - வாடைக் காற்றை வீசச் செய்தன.

எண்வகை நாகங்கள் - வாசுகி, அனந்தன், தட்சகன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன் என்பன. இவை பூமியின்கீழ், நடுவிலிருந்து பூமியைத் தாங்குகின்ற ஆதிசேடனுக்கு உதவியாய்க் கிழக்கு முதலாய எட்டுத் திக்கிலும் முறையே கீழ் நின்று பூமியைத் தாங்குவன. காசியப முனிவரது மனைவியருள் கத்துரு என்பவளிடம் தோன்றிய தெய்வத்தன்மை வாய்ந்தன இப்பாம்புகள். இவற்றைக் கடவுட் பாம்பெனக் குறிப்பிடுவர் அட்ட நாகங்களின் நாக்குகள் போல மின்னல்கள் மின்ன, சூல்கொண்டு கறுத்த மேகங்கள், சூல் முதிர்ச்சியால் நெடிது உயிர்த்தாற்போலக் குளிர்காற்று வீசியது என்றதால் மின்னல், வாடை இவற்றின் கடுமை புலப்படுத்தப்பட்டது. விசும்பு - ஆகாயம், இங்கே இடவாகுபெயராய் மேகத்தைச் சுட்டியது. 'விசும்பின் துளி' (குறள் 10) என்ற இடத்து மேகத்தின் துளி என உரைப்பர் பரிமேலழகர், ஊதை என்பது வழக்கில் ஊதல் எனவும் வழங்கும். ஊதை ஊதின எனப் பன்மையால் கூறியது, பல்வேறிடங்களில் தனித்தனி வீசுதல் பற்றி என்க. "ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம்" (82) என முன்னரும் கூறியது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though the eight great serpents had come to all eight quarters
  2. and curled their tongues round them, the lightning flashed;
  3. the dark sky, blackened like the throat of the forehead-eyed god,
  4. sent out cold winds like the breath that filled it within.

What the poem says

The eight divine serpents who hold up the earth from below, one at each of the eight directions, seem to have risen and flicked their tongues around the horizon: that is the lightning. The clouds, black as Śiva's poison-stained throat, are heavy with rain like a pregnant body, and the cold winds that rush out are like their long, laboured breaths.

The images stress how harsh the lightning and the chill wind of the season are.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ vakai nākaṅkaḷ ticaikaḷ eṭṭaiyum
naṇṇiṉa nā vaḷaittaṉaiya miṉ naka;
kaṇṇutal miṭaṟu eṉak karuku kār vicumpu
uḷ niṟai uyirppu eṉa ūtai ōṭiṉa.