கம்பராமாயணம் 4253 · கிட்கிந்தா 9.16

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கல்லிடைப் படும் - (அந்த மலையிலுள்ள) கற்களின் இடையே (மேகங்கள்) சொரிகின்ற, துளித்திவலை - மழை நீர்த்துளிகள்; கார் இடு வில்லிடை - மேகங்களில் தோன்றிய இந்திர வில்லிலிருந்து பாய்கின்ற; சரம் என - அம்புகள் போல; விசையின் வீழ்ந்தன - வேகத்தோடு விழுந்தன; செல்லிடைப் பிறந்த - (அம்) மேகங்களிலிருந்து தோன்றிய; செங்கனல்கள் - செந்நிறம் கொண்ட இடியாகிய நெருப்புத் திரள்கள்; மணி அல்லிடைச் சிறந்து - மாணிக்கங்கள் இரவுக் காலத்தில் மிகுதியாக ஒளிவீசி; அழல் இயற்றல் போல் சிந்தின - நெருப்பொளி வீசுதல் போலச் சிந்தின.

வில் - இந்திரவில். செல்வது என்ற இயல்பு பற்றி மேகம் 'செல்' எனப்பட்டது போலும். மழைத் தாரைகள் அம்புபோல வீழ, இரவில் மாணிக்க மணிகள் போல ஒளி வீசி இடிகள் சிந்தின என்பதால் நீர் நெருப்பு என இரண்டினையும் மேகம் பெற்றிருந்தமை புலனாகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The drops of rain that struck among the rocks fell swiftly,
  2. like arrows from the bow the clouds had set in the sky;
  3. the red fires born in the clouds scattered down
  4. like rubies blazing brightly in the night and giving off flame.

What the poem says

Rain beats down on the rocks of the hill like arrows shot from the rainbow, which is pictured as a bow drawn across the clouds. The red bolts of lightning and thunder that fall from the same clouds glow like rubies blazing in the dark.

The clouds, called here "the ones that move", hold both water and fire at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kalliṭaip paṭum tuḷit tivalai kār iṭu
villiṭaic caram eṉa vicaiyiṉ vīḻntaṉa;
celliṭaippiṟanta ceṅ kaṉalkaḷ cintiṉa
alliṭai maṇi ciṟantu aḻal iyaṟṟalpōl.