கம்பராமாயணம் 4257 · கிட்கிந்தா 9.20

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வண்ண வில் கர தலத்து அரக்கன் மண்ணொடு
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அருங்கலம் அனைய பெய்வளை
கண் எனப் பொழிந்தது கால மாரியே.

பொருள் · Meaning in Tamil

வண்ண வில் கரதலத்து அரக்கன் - அழகிய வில்லை ஏந்திய கையையுடைய இராவணன்; வாளினன் - வாளாயுதத்தையும் உடையவன்; கொண்டு - (சீதையை) எடுத்துக்கொண்டு; விண்ணிடை கடிது ஏகும் வேலையில் - ஆகாயத்தில் விரைவாகச் செல்கின்ற சமயத்தில்; பெண்ணினுக்கு அருங்கலம் அனைய - மகளிர்க்கு அரிய அணிகலம் போன்ற; பெய் வளை - வளையல் அணிந்த சீதையின்; கண் என - கண்கள் நீர் சொரிந்தாற்போல; காலமாரி பொழிந்தது - கார்காலத்தில் மழை பொழிந்தது.

இராவணன் விண் வழியாகச் சீதையைக் கவர்ந்து சென்றபோது சீதை விடுத்த கண்ணீர்போல மழை பெய்தது எனக் கதை நிகழ்ச்சியே இங்கு உவமையாக்கப்பட்டது. வில்லைக் கொண்டு போர்செய்து பற்றாது, வஞ்சனையால் சீதையைக் கவர்ந்து சென்றதால், வில் டு வெற்று அலங்காரமாயிற்று என்பதால் இகழ்ச்சி தோன்ற 'வண்ண வில் கரதலத்து' என்றார். இராமன் தொடர்ந்து வந்து விடுவானோ என்ற அச்சத்தால் விரைந்து சென்றான் என்பது தோன்ற 'விண்ணிடைக் கடிது கொண்டு' என்றார். சீதை பெண்மைக்கு அணிகலனாவாள் என்பதால், 'பெண்ணினுக்கு அருங்கலம் அனைய பெய்வளை' என்றார் பெய்வளை - அன்மொழித்தொகை; இராமன் சீதையை 'பெண் அருங்கலம்' (2077) என விளித்தது காண்க. கண் எனக் காலமாரி பொழிந்தது என்பதில் சீதை வடித்த கண்ணீர் மிகுதி புலப்படும். இராவணன் கவர்ந்து செல்கையில் சீதை கண்ணீர் விட்டதை 'மழை பொரு கண் இணை வாரியோடு தன் இழை பொதிந்து இட்டனள்' (3903) என்றதால் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the eyes of her with bangles, who was like a rare jewel to womanhood,
  2. at the time when the demon, a fine bow in his hand
  3. and a sword besides, carried her off swiftly through the sky,
  4. so poured the seasonal rain.

What the poem says

Here the comparison comes from the story itself. The rain pours down as Cītai's eyes poured tears when Irāvaṇaṉ seized her and carried her off through the sky.

There is scorn in the mention of his fine bow and sword: he had weapons, yet he took her by trickery, not in fair fight, so the bow was mere ornament. He flew away fast for fear that Irāmaṉ would come after him. Cītai is called a rare jewel to womankind, as Irāmaṉ himself once addressed her, and the downpour suggests how heavily she wept.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṇa vil karatalattu arakkaṉ vāḷiṉaṉ
viṇṇiṭaik kaṭitu koṇṭu ēkum vēlaiyil
peṇṇiṉukku aruṅ kalam aṉaiya peyvaḷai
kaṇ eṉap poḻintatu kāla māriyē.