கம்பராமாயணம் 4258 · கிட்கிந்தா 9.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பரஞ்சுடர்ப் பண்ணவன் - பரஞ்சோதியாகிய சிவபிரான்; பண்டு விண்தொடர் புரம் சுட - பண்டைக்காலத்து விண்ணில் தொடர்ந்து இயங்கிய திரிபுரங்களை எரிக்க; விடு சரம் புரையும் - தொடுத்த அம்பு போன்ற; மின் இனம் - மின்னல்கள்; அரம் சுட - அரத்தினால் அராவப்பட்டு; பொறி நிமிர் அயிலின் - ஒளி வீசுகின்ற வேற் படைகள் போல; ஆடவர் உரம் சுட - (தலைவியரைப் பிரிந்த) ஆடவர்களின் நெஞ்சை எரிப்ப; பிரிந்துளோர் எலாம் - பிரிந்தவர்கள் எல்லாம்; உளைந்தனர் - வருந்தினர்.
சிவபிரான் புரம் எரிக்க அம்பு போன்ற மின்னல்கள் தலைவியரைப் பிரிந்த ஆடவர்களை வருத்தின. பரஞ்சுடர்ப் பண்ணவன் என்றது சிவபிரானை. விண் தொடர் புரம் - வானில் திரிந்து கொண்டு உயிர்களை அழித்து வந்த திரிபுரங்கள். உரம் - மார்பு, இடவாகு பெயராய் நெஞ்சைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flocks of lightning, like the arrow that the god of supreme light once loosed
- to burn the cities that roamed the sky,
- burning the breasts of men like spears that throw off sparks when filed,
- made all who were parted from their loves suffer.
What the poem says
Now it is men apart from their wives who suffer. The lightning resembles the fiery arrow that Śiva, the supreme light, once shot to burn the three flying cities of the demons, which roamed the sky destroying living things.
The flashes sear the hearts of separated lovers like spearheads glowing and throwing sparks as they are sharpened on a file. The poet now applies to men the pain the earlier verses gave to women, and it fits Irāmaṉ most of all.