கம்பராமாயணம் 4260 · கிட்கிந்தா 9.23

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூரி மேகம் - வலிய மேகங்கள்; முறை முறை முழங்கின - மாறி மாறி இடிமுழக்கம் செய்தனவாய், நீர் வழங்கின - மழையைப் பொழிந்து கொண்டு; மிடைவன - ஒன்றோடொன்று நெருங்குபவை; மான யானைகள் - பெரிய யானைகள்; தழங்கின - பிளிறிக் கொண்டு; பொழி மதத் திவலை தாழ்தர - (தம் கவுள்களிலிருந்து) சொரிகின்ற மதநீர்த் தாரைகள் பெருகி விழ; புழுங்கின - சினங்கொண்டு, எதிர் எதிர் பொருவ - ஒன்றோடொன்று எதிர்த்து நின்று போர் புரிவனவற்றை, போன்ற - ஒத்தன.

யானைகள் நிறத்தாலும் வடிவத்தாலும் மேகங்கட்கு உவமை ஆயின. இடி முழக்கத்திற்கு யானைகளின் பிளிறலும், மழை நீர்க்கு அவற்றின் மதநீரும், மேகங்களின் நெருக்கத்திற்கு யானைகள் போரிட நெருங்கும் தன்மையும் உவமையாயின. முழக்கம், நீர் விழுதல், நெருங்குதல் என்பன மேகம், யானை ஆகிய இரண்டிற்கும் பொதுவாய் அமைவதால் உவம உருபு ஓரிடத்து மட்டும் விரிந்துள்ளமை காணலாம். முழங்கின, வழங்கின, தழங்கின, புழுங்கின என்பன முற்றெச்சங்கள். மிடைவன, பொருவ என்பன வினையாலணையும் பெயர்கள்; போன்ற - முற்று; தாழ்தர - தர துணைவினை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thundering again and again, the mighty clouds,
  2. pouring water and pressing together, were like great elephants
  3. trumpeting, the drops of their streaming musth falling down,
  4. raging as they fight one another face to face.

What the poem says

The thick, crowding storm clouds are compared to war elephants fighting head to head. Their thunder is the elephants' trumpeting, the rain is the musth fluid streaming from the elephants' temples, and the way the clouds press together is the way furious elephants close in on each other.

The elephants suit the clouds in colour and in bulk, and the noise, the water and the crowding are shared by both.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḻaṅkiṉa muṟai muṟai mūri mēkam nīr
vaḻaṅkiṉa miṭaivaṉa māṉa yāṉaikaḷ.
taḻaṅkiṉa poḻi matat tivalai tāḻtarap
puḻuṅkiṉa etir etir poruva pōṉṟavē.