கம்பராமாயணம் 4261 · கிட்கிந்தா 9.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விசை கொடு - வேகம் கொண்டு, மாருதம் - காற்று; மறித்து வீசலால் - மாறி மாறி வீசுவதால்; அசைவுறு சிறு துளி - (தம்மிடத்திலிருந்து அசைதல் பொருந்திய சிறிய மழைநீர்த்துளி; அப்பு மாரியின் - அம்புமழைபோல்; இசையுற எய்வன - எதிர்த்திசையில் பொருந்துமாறு செலுத்துவனவாயும்; இயைவவாய் - எதிர்த் திசை செலுத்தியதை ஏற்பனவுமாய்; இருந் திசையொடு திசை - பெரிய திசையோடு திசை; செருச்செய்தல் ஒத்தவே - போர் செய்வதைப் போன்று விளங்கின.
பல திசைகளில் அடிக்கும் காற்றின் வேகத்தால் மேகம் மழை நீர்த் துளிகளை எதிர்எதிரே செலுத்துதல், திசையொடு திசை அம்பு தொடுத்துப் போரிடுவது போல் இருந்தது. இயல்பாகக் காற்றால் அசைவுறும் மழைத் துளிகளைத் திசையொடு திசை எய்யும் அம்பு மாரியாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணி ஆகும். மறித்து வீசல் - அடிக்கடி திசை மாறி வீசுதல், அப்பு - அம்பு வலித்தல் விகாரம், 'அக்கணத்து அடுகளத்து அப்பு மாரியால்' (8991) என்றது காண்க. இருந்திசை பெரிய திசைகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பன. இப்பாடலில் திசைகள் பொருவன போன்ற என வருணித்துள்ளார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the wind blew with force, turning back and forth,
- the small drops it tossed about, like a rain of arrows
- shot so as to strike and received in return, made it seem that the vast
- quarters were waging war on one another.
What the poem says
The wind keeps shifting, driving the fine rain first one way and then the other. The poet imagines the four great directions at war, shooting volleys of arrows at each other and taking each other's fire in return.
Rain blown about by gusting wind is ordinary; making it a battle of arrows between the quarters gives the scene an invented cause, a favourite device in this canto.