கம்பராமாயணம் 4270 · கிட்கிந்தா 9.33

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பேடையும் ஞிமிறும் பாயப்பெயர்வுறப் பிறக்கும் ஓசை
ஊடுறத் தாக்கும் தோறும்ஒல் ஒலி பிறப்ப, நல்லார்
ஆடு இயல் பாணிக்கு ஏற்கும்அரிய அவ் அமிழ்தப் பாடல்
கோடியர் தாளம் கொட்டல்மலர்ந்த கூதாளம் ஒத்த.

பொருள் · Meaning in Tamil

ஞிமிறும் பேடையும் - ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும்; பாயப் பெயர்வுழி - ஒன்றன் மீது ஒன்று மோதுவது போல வேகத்தோடு வரும்பொழுது; பிறக்கும் ஓசை - உண்டாகின்ற ஓசையும்; ஊடுறத் தாக்கும் தோறும் - (அவை) ஒன்றையொன்று மோதும் பொழுதெல்லாம்; பிறப்ப ஒல் ஒலி - பிறப்பனவாகிய ஒல் எனும் ஓசையும்; நல்லார் ஆடு இயல் - அம்மலையில் நாடகமகளிர் ஆடும் கூத்தின் இயல்பிற்கேற்ற; பாணிக்கு ஒக்கும் - கைத்தாளத்தை ஒத்திருக்கும்; மலர்ந்த கூதாளம் - மலர்ந்த கூதள மலர்கள்; ஆரிய அமிழ்தப் பாடல் - (அவர்கள் பாடிய) சிறந்த அமுதம் போன்ற பாடல்களுக்கு ஏற்ப; கோடியர் தாளம் கொட்டல் ஒத்த - நட்டுவர் தாளம் கொட்டுவதை ஒத்தன.

மிஞிறு - ஞிமிறு - இலக்கணப்போலி; முன்னே பேடை என்றதால் 'மிஞிறு' ஆண் வண்டாயிற்று. முன் செய்யுளில் மயில்கள் ஆடும் நாடக அரங்கைக் காட்டியவர், இப்பாடலில் அவ்வரங்கில் நிகழும் கூத்திற்கேற்ப வண்டுகள் எழுப்பும் ஓசை தாளமாகவும், மலர்ந்த கூதளமலர்கள் தாளம் கொட்டுவதை ஒத்தும் விளங்குவதைக் காட்டுகிறார் இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி. கூதாளச் செடிகளின் மலர் வடிவம் தாளம் போலிருக்கும் கூதாளி - கூதளம், தாளி, நறுந்தாளி எனவும்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sound made as the female bees and the males dart and swerve,
  2. and the hum that rises each time they strike against one another, were like
  3. the hand-beat that keeps time for the dancing of fair women; the opened kūtāḷam flowers
  4. were like the masters beating cymbals for noble, nectar-sweet songs.

What the poem says

The stage image continues from the previous verse. Now the poet supplies the rhythm section. The buzz of male and female bees darting about and bumping together is the clapping that keeps time for the dancers.

The kūtāḷam plant has cymbal-shaped flowers, so its opened blossoms look like the dance masters clashing their cymbals to accompany the songs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēṭaiyum ñimiṟum pāyap peyarvuḻip piṟakkum ōcai
ūṭuṟat tākkumtōṟum ol oli piṟappa, nallār
āṭu iyal pāṇikku okkum āriya amiḻtap pāṭal
kōṭiyar tāḷam koṭṭal malarnta kūtāḷam otta.