கம்பராமாயணம் 4271 · கிட்கிந்தா 9.34

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வழைதுறு கான யாறு,மாநிலக் கிழத்தி மக்கட்கு
உழைதுறு மலைமாக் கொங்கைசுரந்த பால் ஒழுக்கை ஒத்த;
விழைவுறு வேட்கையோடும்வேண்டுநர்க்கு உதவ வேண்டிக்,
குழைதொறும் கனகம் தூங்கும்கற்பகம் நிகர்த்த, கொன்றை.

பொருள் · Meaning in Tamil

வழை துறு - சுரபுன்னை மரங்கள் அடர்ந்த; கானயாறு - காடுகளில் பெருகிய நதிகள்; மாநிலக் கிழத்தி - நிலமகள்; மக்கட்கு - தன் மக்கள் பொருட்டு; உழை துறு மலை மாக் கொங்கை - புடை பருத்த மலைகளாகிய தன் பெரிய மார்பகத்திலிருந்து; சுரந்த பால் ஒழுக்கை ஒத்த - (அன்பினால்) சுரந்து பெருகவிட்ட பாலின் தாரைகளைப் போன்று இருந்தன; கொன்றை - (பொன் போன்ற மலர்கள் பூக்கும்) கொன்றை மரங்கள்; விழைவுறு வேட்கையோடும் - (பொருட்களை) விரும்பும் ஆசையால்; வேண்டினர்க்கு உதவ வேண்டி - வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டி; குழைதொறும் கனகம் தூங்கும் - தளிர்கள்தோறும் பொன்னைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்; கற்பகம் நிகர்த்த - கற்பக மரங்களை ஒத்தன.

நிலமகளுக்கு மலைகளைக் கொங்கைகளாகக் கூறும் இலக்கிய மரபு உண்டு. 'பணைத்தோள் மாநில மடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல' (சிறுபாண். 1-2); 'சோதி மதி வந்து தவழ் சோலை மலையொடு இரண்டாய், மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே' (திருவேங்கடமாலை - 2) 'கொங்கையே பரங்குன்றமும் கொடுங்குன்றும்' (திருவிளை - நகர -2); எனப் பலரும் கூறுதல் காண்க. மக்கட்கு நிலமகளின் கொங்கை சுரந்த பாலொழுக்கை ஆறு ஒக்கும் என்றார். 'சரயு என்பது தாய்மலை அன்னது' (23); "சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரைபுனல் கன்னிகொண்டு இழிந்த தென்பவே" (சீவக - 39) என்றமை காண்க. இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி மாநிலக் கிழத்தி, மலைமாக் கொங்கை என்பன உருவகங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The forest rivers, crowded with laurel trees, were like streams of milk
  2. that the lady of the great earth let flow for her children from her breasts, the broad-sided hills;
  3. the koṉṟai trees were like the wishing trees which, longing to give
  4. to those who ask, hang gold from every spray.

What the poem says

Two images of generosity. The rivers running down through the forests are milk flowing for the Earth's children from her breasts, the mountains. Tamil poets often called hills the breasts of the Earth, and Kampaṉ earlier called the river Carayu a mother's milk.

The koṉṟai trees, hung with cascades of golden flowers, look like the kaṟpakam, the wishing trees of heaven, which dangle gold from every branch so as to give it to anyone who asks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḻai tuṟu kāṉa yāṟu, mā nilak kiḻatti makkaṭku
uḻai tuṟu malai mārk koṅkai curanta pāl oḻukkai otta;
viḻaivuṟu vēṭkaiyōṭum vēṇṭiṉarkku utava vēṇṭi,
kuḻaitoṟum kaṉakam tūṅkum kaṟpakam nikartta, koṉṟai.