கம்பராமாயணம் 4279 · கிட்கிந்தா 9.42

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மருவி நீங்கல் செல்லா - ஒன்று சேர்ந்து ஒன்றைவிட்டு ஒன்று நீங்காமல்; நெடு மாலைய - நீளமாக வரிசைப்பட்டனவாய்; வானில் - வானத்தில்; பருவ மேகத்தின் அருகு உற - கார்கால மேகத்தின் அருகே பொருந்துமாறு; பறப்ப குருகு இனம் - பறப்பனவாகிய நாரையின் கூட்டங்கள்; திருவின் நாயகன் இவன் என - 'திருமகளின் கணவன் இவன் என்று; தே மறை தெரிக்கும் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களால் தெளிவிக்கப்படுகின்ற; ஒருவன் மார்பினின் - ஒப்பற்ற திருமாலின் மார்பில் சாத்திய; உத்தரியத்தினை ஒத்த - மேலாடையை ஒத்து விளங்கின.

கரியமேகத்தின் அருகில் தொடர்ந்து பறந்த நாரைகளின் வரிசை திருமாலின் மார்பில் சாத்திய வெண்பட்டு உத்தரீயம் போல் விளங்கியது. இதுவும் நிறமும் தோற்றமும் பற்றி வந்த உவமை அணி. நாரையின் காலிலுள்ள சிவப்பு நிறம் மேலாடையின் கரைபோல் விளங்கியது. குருகு - பறவைப் பொதுப்பெயர் இங்கு நாரையைக் குறித்தது. நாரைகள் நெருக்கம் கலையாது வரிசைப்பட்டுச் செல்வதை 'மருவிநீங்கல் செல்லா நெடு மாலைய' என்றார். 'நீர் செல நிமிர்ந்த மாஅல் போல... எழிலி' (முல்லை - 3 - 5) என்ற அடிகளில் மேகத்திற்குத் திருமாலை உவமை கூறியது காண்க. 'மீயோங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப, ஓயா அருவித்திரள் உத்தரியத்தை ஒப்ப, தீயோர் உளர் ஆகிய கால், அவர் தீமை தீர்ப்பான், மாயோன் மகரக் கடல் நின்று எழு மாண்பது ஆகி' (4780) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. தே மறை - வேதத்திற்குத் தெய்வத்தன்மை என்பது எப்போதும் ஒரேமாதிரி நிலைத்திருத்தல், இறைவனால் வெளிப்படுத்தப்படல், பொருள்களின் இயல்பை உள்ளபடி அறிவித்தல், அனைவராலும் சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்படல் முதலியனவாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In long garlands that clung together and never broke apart,
  2. the flocks of herons flying in the sky beside the seasonal clouds
  3. were like the upper cloth on the breast of the One
  4. whom the divine Vedas reveal, saying, "This is the lord of Śrī."

What the poem says

A second image of birds against the clouds. Long unbroken lines of white herons fly close beside the dark rain clouds and look like the white silk shawl draped over the chest of Viṣṇu, husband of the goddess Śrī, whom the Vedas proclaim as the supreme Lord.

The herons' red legs even suggest the coloured border of the cloth. Again the dark cloud stands for Viṣṇu's body, an old comparison that goes back to the Tamil poem Mullaippāṭṭu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruvi nīṅkalcellā neṭu mālaiya, vāṉil
paruva mēkattiṉ aruku uṟak kurukuiṉam paṟappa,
'tiruviṉ nāyakaṉ ivaṉ' eṉat tē maṟai terikkum
oruvaṉ mārpiṉiṉ uttariyattiṉai otta.