கம்பராமாயணம் 4280 · கிட்கிந்தா 9.43

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பசும் புல் - பசுமையான புல்லின் தொகுதி; உற வெதுப்புறும் - மிகவும் வெதும்பச் செய்த; கொடுந்தொழில் - கொடிய தொழிலை உடைய; வேனிலான் ஒழிய - வேனிற்காலம் என்னும் கொடுங்கோல் அரசன் நீங்கினானாக, நினைப்ப அரும் திறம் - நினைத்தற்கு அரிய மேன்மையுடைய; காரெனும் செவ்வியோன் - கார்காலம் என்னும் செம்மையான குணங்களையுடையவன்; சேர - (அரசனாய்) வந்து சேர; நெடுநில மடந்தை - பெரிய நிலமாகிய நங்கை; நிறை மனத்து உறு - மாட்சிமை பெற்ற மனத்தில் கொண்ட, குளிர்ப்பினின் - மகிழ்ச்சியால்; புறம் பொடித்தன - உடம்பு முழுவதும் சிலிர்த்தனவான; மயிர்த்தலம் போன்றன - மயிர்களைப் போன்றன.

வெயிலால் வறண்ட நிலத்தில் மழை பெய்வதால் புல் முளைத்ததை, நில மங்கை மகிழ்ச்சியால் உடல் சிலிர்த்ததாகக் கூறியதால் இது தற்குறிப்பேற்ற அணி. மயிர் சிலிர்த்தல் - மகிழ்ச்சியாலும் குளிர்ச்சியாலும் ஆவது. காலத்தை அரசனாக உருவகிப்பது கவி மரபாகும். உலகத்தின் ஆக்கல், அழித்தலுக்குத் துணைக் காரணமாகக் காலம் இருப்பதால் அதனை அரசன் என்றார். 'இன் இளவேனில் இளவரசாளன்' (சிலப் - 8.57), 'கார் அரசாளன்' (சிலப்-14.96), 'பனி அரசுயாண்டுளன்' (சிலப் - 14.112), 'இன் இளவேனில் யாண்டு உளன்; (சிலப் - 14 - 117) என்றனவும் காண்க. நிலத்தை மடந்தையாக உருவகித்தலைத் "திரை நீர்ஆடை இருநிலமடந்தை" (சிலப் - 4- 7) என்ற தொடரும் உணர்த்தும். கார் கைம்மாறு கருதாது மழை பொழிந்து நன்மை செய்தலின் 'நினைப்ப அரும்திறம் காரெனும் செவ்வியோன்' என்றார். வெப்பம் கொடுத்து மிகுந்த துன்பம் விளைத்தலால் 'கொடுந்தொழில் வேனிலான்' என்றார். வேனிலின் வெம்மையும் காரின் தன்மையும் ஏற்ற அடைமொழிகளால் உணர்த்தப்பட்டன. மகிழ்ச்சியாலும், குளிர்ச்சியாலும் உடம்பில் மயிர் சிலிர்த்தல் இயல்பாகும். 'இவன், அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர் பொடித்தன போலும் இப்புல்' என்று உன்னுவாள்' (2750) என இதே கற்பனை முன்னும் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the cruel-handed Summer, who scorched all things, departed,
  2. and the gracious Rain, whose worth is past imagining, came to reign,
  3. the green grass looked as if the lady of the wide earth,
  4. with the coolness that filled her heart, had her body hair standing on end.

What the poem says

The seasons are pictured as kings. Summer, a cruel tyrant who scorched the land, has gone, and the Rainy Season, a good king who gives without asking anything in return, has taken the throne.

The Earth, imagined as a woman, is so delighted and refreshed that her hair stands on end all over her body, and that thrill shows as the fresh green grass springing up everywhere. Kampaṉ used the same fancy earlier, of the grass bristling at the touch of Irāmaṉ's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟa vetuppuṟum koṭuntoḻil vēṉilāṉ oḻiya,
tiṟam niṉaippa aruṅkār eṉum cevviyōṉ cēra,
niṟai maṉattu uṟu kuḷirppiṉiṉ neṭu nila maṭantai
puṟa mayirttalam poṭittaṉa pōṉṟaṉa pacumpul.