கம்பராமாயணம் 4290 · கிட்கிந்தா 9.53

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெப்பு ஆர் - கடுமை நிறைந்த; நெடு மின்னின் எயிற்றை - நீண்ட மின்னல்களாகிய பற்களை உடையாய்! வெகுண்டு - சினங்கொண்டு; விசும்பின் எப்பாலும் இருண்டு - ஆகாயத்தில் எல்லாப் பக்கத்திலும் கருநிறங் கொண்டு; எழுவாய் - தோன்றுகின்றாய்; அப் பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய் - (ஆதலால்) கொடுஞ்செயலை உடைய அந்த வஞ்சனை நிறைந்த அரக்கர்களையே நீ முற்றும் ஒத்து விளங்குகிறாய், உயிர் கொண்டு அலது - எனது உயிரைக் கவர்ந்து கொண்டன்றி; ஓவலையோ - நீங்கமாட்டாயோ?

நெடு மின்னலாகிய பற்களை உடையதாய் வானிடத்து இருண்டு இடியொலிசெய்து வெகுண்டு பரவி எழுதல் நோக்கி மேகம் அரக்கர்க்கு ஒப்பாயிற்று. மின்னெயிறு உருவகம்.

இராமன் அஃறிணைப் பொருளாகிய காரொடு பேசியது வழுவமைதியின் பாற்படும். 'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇக் யா மரபில். சொல்லுந போலவும் கேட்குந போலவும் னியா றைய என்மனார் புலவர்' (தொல் - செய் - 200) என்றதும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You have long lightnings for fangs, full of fierce heat; in anger
  2. you rise, darkening the sky on every side;
  3. you are just like those sinful, treacherous demons;
  4. will you not stop until you have taken my life?"

What the poem says

Still addressing the cloud, Irāmaṉ sees in it the very demons who wronged him. Its long lightning flashes are fangs, it darkens and spreads across the whole sky in fury, and it roars. He asks whether it, like them, means to leave only after taking his life.

Speaking to a lifeless thing as if it could hear is permitted by Tamil poetic convention, as the old grammar Tolkāppiyam notes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veppu ār neṭu miṉṉiṉ eyiṟṟai; vekuṇṭu
ep pālum vicumpiṉ iruṇṭu eḻuvāy;
ap pātaka vañca arakkaraiyē
oppāy; uyir koṇṭu alatu ōvalaiyō?