கம்பராமாயணம் 4291 · கிட்கிந்தா 9.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மயிலே - மயிலே! அயில் ஏய் விழியார் - வேலைப் போன்ற கண்களை உடையவரும்; விளை ஆர் அமுதின் - பாற்கடலில் தோன்றிய அரிய அமிழ்தினையும்; குயில் ஏய் மொழியார் - குயிலின் குரலையும் போன்ற மொழியுடையவளுமான சீதையை; கொணராய் - தேடிக் கொண்டு வந்து தரமாட்டாய். கொடியாய் - கொடுந் தன்மையுடையாய்! துயிலேன் ஒருவேன் - துயில் கொள்ளாதவனாய், தனித்திருப்பவனாகிய எனது; உயிர் சோர்வு உணர்வாய் - உயிர் தளர்ச்சி அடைதலை அறிவாய்; எனை நீ வலி ஆடுதியோ - (அறிந்திருந்தும்) நீ உன் வலிமை காட்டி என்னை வருத்துவாயோ?
மயிலின் தோகையும் சாயலும் சீதையின் கூந்தலையும், சாயலையும் நினைப்பூட்டியதால் இராமன் வருந்தினான். மயிலானது தனக்கு உதவி செய்யா விடினும் வருத்துதலாகிய கொடுமையையாவது செய்யாது தவிர்த்திருக்கலாம். மாறாக, அது சீதையைத் தேடித் தராததோடு துன்பத்தையும் பெருக்கியதால் 'கொடியாய்' என்றான். விழியார் மொழியார் என்பன உயர்த்தற் பொருளில் வந்த பன்மை. அமிழ்தினையும் குயிலையும் ஒத்த மொழி என்க. குயில் ஆகுபெயராய்க் குரலை உணர்த்திற்று. பிரிந்தார்க்கு உறக்கமின்மை இயல்பாகும். சீதையைப் பிரிந்திருக்கும் தனிமையை 'ஒருவேன்' எனும் சொல் உணர்த்தும். ஒருவன் உயிர் சோர்ந்திருக்கையில் வலிமை காட்டுதல் வீரம் அன்று ஆதலால் 'உயிர் சோர்வு உணர்வாய், எனை நீ வலி ஆடுதியோ?' என வினவினான். வலி ஆடுதல் - வன்மை காட்டி வருத்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Her of the spear-like eyes, whose speech is like the rare nectar of the churned sea
- and like the cuckoo's, you will not bring back, cruel one!
- You know how my life is failing, alone and sleepless as I am;
- O peacock, will you still show your strength against me?"
What the poem says
Now Irāmaṉ turns to a peacock. Its tail and graceful bearing remind him of Cītai's hair and grace, and that pains him. It has not helped him find her, whose eyes are like spears and whose voice is sweet as nectar and as a cuckoo's song; worse, it adds to his torment.
He calls it cruel and asks whether it is brave to show off its strength against a man who is sleepless, alone and close to death.