கம்பராமாயணம் 4302 · கிட்கிந்தா 9.65

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"காலம் நீளிது காரும்; மாரியும்வந்தது; " என்ற கவற்சியோ?
நீல மேனி அரக்கர் வீரம்நினைந்து அழுங்கிய நீர்மையோ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்நாட வாரல் இலாமையோ?
சால நூல் உணர் கேள்வி வீர!தளர்ந்தது என்னை? தவத்தினோய்!

பொருள் · Meaning in Tamil

சாலும் நூல் உணர் கேள்வி வீர - மிகுதியான நூல்களைக் கற்று உணர்ந்த அறிவையும் கேட்டு அறிந்த அறிவையும் உடைய வீரனே! தவத்தினோய் - தவ ஒழுக்கத்தை மேற்கொண்டவனே! கார் காலமும் நீளிது - 'கார்காலம் நீண்ட காலத்தினதாய் உள்ளது; மாரியும் வந்தது - மழையும் வந்துவிட்டது'; என்ற கவற்சியோ - என்ற கவலைதானோ? நீலமேனி அரக்கர் வீரம் நினைந்து - கருநிற மேனியராய அரக்கர்களின் வீரத்தை நினைத்து; அழுங்கிய நீர்மையோ - (அவர்களை வெல்ல இயலாதோ என) வருந்திய தன்மை தானோ? மடந்தை வைகு இடம் நாட - சீதை உள்ள இடத்தைத் தேடுவதற்கு; வாலி சேனை வாரல் இலாமையோ - வாலியின் சேனை இன்னும் வரவில்லை என்பதனாலோ? தளர்ந்தது என்னை - நீ மனம் தளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் யாது?

நூலறிவும், கேள்வியறிவும், வீரமும், தவ ஒழுக்கமும் மிக்க இராமன் தளர்ச்சியடைதல் பொருந்தாது என்பானாய்ச் 'சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய்' என்றான். இராமன் தளர்ச்சிக்குக் காரணம் எதுவெனக் கேட்பான் போல அவனைத் தேற்றினான். சுக்கிரீவனுக்குப் பட்டம் கட்டிய இலக்குவனே இப்பொழுது சுக்கிரீவன் படை என்று கூறாமல் வாலி சேனை என்று கூறுவது சுக்கிரீவனை எந்த அளவிற்கு இலக்குவன் ஏற்றுக் கொள்கிறான் என்பதற்குச் சான்றாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Is it the worry that 'the time is long, and the rains and the downpour have come'?
  2. Is it distress at the thought of the valour of the dark-bodied demons?
  3. Or is it that Vālī's army has not come to search out where the lady dwells?
  4. O hero, learned in the books and in all that is heard, O man of penance, why have you lost heart?"

What the poem says

Ilakkuvaṉ tries to comfort Irāmaṉ by asking him to name the reason for his despair. Is it the long wait through the rainy season? Fear of the demons' might? Or that the monkey army has not yet come to begin the search for Cītai?

By listing Irāmaṉ's learning, valour and discipline, he implies that such a man should not lose heart at all. The commentary notes a telling detail: Ilakkuvaṉ calls the monkey troops "Vālī's army", not Cukkirīvaṉ's, a hint that he is not yet sure of the new king he himself crowned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kālam nīḷitu kārum; māriyum vantatu;" eṉṟa kavaṟciyō?
nīlamēṉi arakkar vīram niṉaintu aḻuṅkiya nīrmaiyō?
vāli cēṉai maṭantai vaiku iṭam nāṭa vāral ilāmaiyō?
cālum nūl uṇar kēḷvi vīra! taḷarntatu eṉṉai? tavattiṉōy!