கம்பராமாயணம் 4306 · கிட்கிந்தா 9.69

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தை - எம் தந்தை போன்றவனே! காது கொற்றம் - பகைவரைக் கொல்லுதலால் வரும் வெற்றி; நினக்கு அலாது - (அற வழியிற் செல்லும்) உனக்குக் கிடைப்பதல்லால்; பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ - (அவ் அறத்திற்கு மாறுபட்ட) அயலார்க்கு (அரக்கர்களுக்கு) எவ்வாறு கிட்டும்? வேதனைக்கு இடம் ஆதல் - வருந்துதற்கு இடம் தந்து மனமழிவது; வீரதை அன்று - வீரத்தன்மையாகாது. பேதைமை ஆம் அரோ - (அஃது) அறியாமையின் பாற்படும் அல்லவா? போது பிற்படல் உண்டு - (எடுத்த காரியம்) காலங்காரணமாகப் பிற்படுதலும் இயல்பு; இது ஓர் பொருள் அன்று - உனக்கு இது ஒரு பொருட்டன்று. நின்று புணர்த்தியேல் - இப்பொழுதே முனைந்து நின்று முயற்சி செய்வாயாயின்; யாது உனக்கு இயலாதது - உன்னால் செய்ய இயலாதது யாது இருக்கின்றது? வருந்தல் என்ன இயம்பினான் - (ஆதலால்) வருந்த வேண்டாம்' என்று சொன்னான்.

தமையன் தந்தைக்கு நிகர் ஆதலின் 'எந்தை' என விளித்தான். 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்பது நியதி ஆதலின் இராமன் வெற்றிபெறல் உறுதி என்பதைக் 'கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?' என்றான். வீரதை - வீரம்; போது பிற்படல் - காலத்தாழ்வு நேரல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Victory that slays the foe, how could it fall to anyone but you?
  2. To give way to anguish is not valour; it is foolishness indeed;
  3. that the time is delayed may happen; that is nothing; if you stand firm and set to work,
  4. what is there that you cannot do? Do not grieve, my father," he said.

What the poem says

Ilakkuvaṉ ends his speech of comfort. He addresses Irāmaṉ as "my father", since an elder brother stands in a father's place. Victory belongs to righteousness, so it can go to no one but Irāmaṉ, never to the demons.

Giving in to grief is not heroic but foolish. Delay forced by the season is a small matter; once Irāmaṉ sets his mind to the task, nothing will be beyond him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kātu koṟṟam niṉakku alātu piṟarkku evvāṟu kalakkumō?
vētaṉaikku iṭam ātal vīratai aṉṟu; pētaimai ām arō;
pōtu piṟpaṭal uṇṭu; itu ōr poruḷ aṉṟu; niṉṟu puṇarttiyēl
yātu uṉakku iyalātatu? entai! varuntal' eṉṉa iyampiṉāṉ.