கம்பராமாயணம் 4307 · கிட்கிந்தா 9.70

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர்சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்,
இற்ற இன்னல் இயக்கம் எய்திட,வைகல் பற்பல ஏக, மேல்
உற்று நின்ற வினைக் கொடும் பிணிஒன்றின்மேல் உடன் ஒன்று உராய்,
மற்று வெம் பிணி பற்றினாலென,வந்து எதிர்ந்தது மாரியே.

பொருள் · Meaning in Tamil

உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் - (கார்காலத்தின் பிடியில் உடலும் உள்ளமும் ஒருங்கே ஒடுங்க) உயிர்த்தளர்ச்சியுற்ற பழையோனாகிய (திருமாலின் கூறான) இராமன்; சொற்ற தம்பி - தேறுதல் கூறிய தம்பியான இலக்குவனின்; உரைக்கு உணர்ந்து - சொற்களால் தெளிவு பெற்று; இற்ற இன்னல் - துன்பம் நீங்கியவனாய்; இயக்கம் எய்திட - நடமாட்டம் கொள்ள; வைகல் பற்பல ஏக - (அவ்வாறு) பற்பல நாட்கள் கழிய; மேல் - பின்பு; உற்று நின்ற வினைக் கொடும் பிணி ஒன்றின் மேல் - (முன்னமே) உடம்பில் பொருந்தி நின்ற ஊழ்வினை வயத்தால் கொடிதாகிய நோய்; உடன் உராய் பற்றினால் என - உடன் வந்து பற்றிக் கொண்டது போல; மாரி வந்து எதிர்ந்தது - கூதிர்காலம் வந்து தோன்றியது.

'வெந்துயர் விரவு திங்களும் விரைவு சென்றன (4214) என இலக்குவன் ஆறுதல் உரையில் கூறினும், பல நாட்கள் கழிந்த பின்னரே கார்காலம் முடிந்தது என்பதை 'வைகல் பற்பல ஏக' என்ற தொடர் உணர்த்திற்று. உரைக்கு - உரையினால் எனக் கொள்க; உருபு மயக்கம்; இராமனின் கடவுட்டன்மையைத் 'தொல்லையோன்' என்ற சொல் உணர்த்தும். உடம்பு பெற்ற அளவில் செய்த வினை தன் பயன் விளைக்க வந்து சேருமாதலின் 'உற்று' என்றார் வினையால் ஏற்பட்ட பிணியாகலின் 'கொடும்பிணி' எனப்பட்டது. ஒரு நோயின் மேல், மற்றொரு நோயும் வந்து பொருந்தியது போல முன்னர்ப் பெய்த மழை இராமனை வருத்தவும், அதற்குமேல் வருத்தம் விளைவிக்கப் பின் மழையும் பெய்யத் தொடங்கியது என்க. உவமை அணி. முன்னர்ப் பெய்த மழை கொடும்பிணி போன்றது ஆகப் பின்னர்ப் பெய்த மழை அக்கொடும்பிணியுடன் மற்றொரு வெம்பிணி சேர்ந்து கொண்டது போன்றது எனக் கூறியதால், முன்னர்ப் பெய்த கார்கால மழையினும், கூதிர் கால மழை அதிக துன்பத்தை அளிக்கும் என உணர்த்தப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Ancient One, whose life had sunk and shrunk, came to himself at the words his brother spoke,
  2. and his anguish broken, he moved about again; many days went by; and then,
  3. as when on one cruel sickness, born of past deeds, that has already taken hold, another comes and clings,
  4. and yet another fierce sickness seizes too, the further rains came on to meet him.

What the poem says

Irāmaṉ, called the Ancient One as a reminder that he is the eternal god, takes heart from his brother's words, shakes off his despair and moves about again. Many days pass; the rainy season does not end as quickly as Ilakkuvaṉ promised.

Then the late rains of the cold season, kūtir, arrive. To Irāmaṉ, already suffering, this is like a second disease striking a body already wasted by a cruel illness that past deeds have brought on. The comparison implies that the cold-season rains are even harder to bear than the monsoon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1coṟṟa tampi uraikku uṇarntu, uyir cōrvu oṭuṅkiya tollaiyōṉ,
iṟṟa iṉṉal iyakkam eytiṭa, vaikal paṟpala ēka, mēl
uṟṟu niṉṟa viṉaik koṭum piṇi oṉṟiṉmēl uṭaṉ oṉṟu urāy,
maṟṟum vem piṇi paṟṟiṉāleṉa, vantu etirntatu māriyē.