கம்பராமாயணம் 4312 · கிட்கிந்தா 9.75

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிறம் கருகு கங்குல், பகல்,நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனிஅந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளிபடப்,பெயர்வில் குன்றின்,
உறங்கல பிறங்கல் அயல்நின்ற உயர் வேழம்.

பொருள் · Meaning in Tamil

நிறம் கருகு கங்குல் - நிறம் கறுத்துத் தோன்றுகின்ற இரவுக் காலத்திலும், பகல் - பகல் வேளையிலும்; நின்ற நிலை நீவா - தாம் நின்ற தவநிலையிலிருந்தும் நீங்காமல்; அறம் கருது சிந்தை - அறத்தையே நினைக்கின்ற சிந்தையுடையவர்களாய், முனி அந்தணரின் - (எல்லாப் பற்றுக்களையும்) வெறுத்தொதுக்கிய முனிவர்கள்போலவும். பிறங்கு அரு ஆலி நெடுந்துளி பட - ஆலங்கட்டிகளோடு விளங்குகின்ற அரிய மழையின் பெரிய மழைத்தாரைகள் தம் மேல் பட; பெயர்வுஇல் குன்றில் - அசைதல் இல்லாத குன்று போலவும்; உயர்வேழம் - உயர்ந்த யானைகள்; உறங்கல - உறக்கம் கொள்ளாதனவாய்; பிறங்கல் அயல் நின்ற - மலைப்பக்கங்களில் அசையாது நின்றன.

மழைகள் உறங்காமல், அசையாமல் இருந்த யானைகளுக்கு முனிவர்களும், மலையும் உவமை. அந்தணரைப் போல உறங்காமலும், குன்று போல அசையாமலும் என முறையே இயைந்து பொருள்படுதல் பற்றி முறை நிரல் நிறை அணி எனப்படும். பெயர்வு இல் குன்று - 'அசலம்' என மலைக்கு ஒரு பெயராதல் காண்க. மழைக்காலத்து உறங்கா நிலையில் மலையை அடுத்து அசையாது யானைகள் நின்று கொண்டிருந்தன. குறிஞ்சி நிலத்துக் கூதிர்காலக் காட்சி இப்பாடலில் கூறப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the night of darkened colour and through the day, never moving from where they stood,
  2. like sages of righteous mind who have renounced all, and, as the great
  3. bright drops of hail-laden rain beat upon them, like hills that never move,
  4. the tall elephants stood sleepless beside the mountains.

What the poem says

A cold-season scene from the hill country. Hail and heavy rain beat down, and the great elephants stand beside the mountainsides day and night, neither sleeping nor stirring.

The poet gives two comparisons matched in order: in their wakefulness they are like ascetic sages who stay at their posts night and day, minds fixed on righteousness; in their stillness they are like the hills themselves, which Sanskrit calls acala, "the unmoving".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṟam karuku kaṅkul, pakal, niṉṟa nilai nīvā
aṟam karutu cintai muṉi antaṇariṉ, ālip
piṟaṅku aru neṭun tuḷi paṭap, peyarvu il kuṉṟil,
uṟaṅkala piṟaṅkal ayal niṉṟa uyar vēḻam.